📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
பாடங்கள் · அலகு 2 · நொதிகள்

நொதிகள்

ஏன் இது முக்கியம்? உங்கள் வாயில் உணவு சாப்பிடும்போதே அமைலேஸ் என்சைம் மாவுச்சத்தை சர்க்கரையாக உடைக்கிறது — நீங்கள் கவலைப்படாமலே நடக்கும் வேதியியல். என்சைம்கள் இல்லாமல் செரிமானம் நிமிடங்களில் நடப்பது வாரங்கள் எடுக்கும்.

என்சைம்கள் ஏவல் சக்தியை (activation energy) குறைக்கின்றன — கட்டையை எரிக்க நெருப்பு வேண்டும், ஆனால் என்சைம் அந்த 'தொடக்க தீ'யை சிறிதாக்கி சாதாரண உடல் வெப்பநிலையிலேயே ஆயிரக்கணக்கான வினைகளை சாத்தியமாக்குகிறது.

⎷ கற்றல் விளைவு / NIE Learning Outcome
  • நொதியம் (enzyme) ஒரு உயிரியல் ஊக்கியாக (biological catalyst) ஏவல் சக்தியை (activation energy) குறைப்பதை விளக்குதல்.
  • நொதியத்தாக்கப் பொறிமுறையையும் (induced fit) வீதத்தைப் பாதிக்கும் காரணிகளையும் விபரித்தல்.
  • போட்டிக்குரிய, போட்டியற்ற நிரோதங்களையும் (inhibition) அலோஸ்ரெறிக் ஒழுங்காக்கலையும் வேறுபடுத்துதல்.

நொதியம் (enzyme) என்பது உயிரியல் ஊக்கியாக (biological catalyst) தொழிற்படும் ஒரு மாமூலக்கூறு (macromolecule) ஆகும். நொதியங்கள் உயிருள்ள கலங்களில் உற்பத்தியாக்கப்படுகின்றன. இவை அனுசேபத் தாக்கங்களை (metabolic reactions) சீராக்குவதில் முக்கிய வகிபாகம் வகிக்கின்றன.

நொதியத்தின் பொதுவான இயல்புகள்

குளுக்கோசிடேஸ் நொதியம் — உயிர்ப்பு மையம்
Glucosidase enzyme — active site
Wikipedia → · CC
  1. அனேகமான நொதியங்கள் கோளப்புரதங்களாகும் (globular proteins).
  2. நொதியங்கள் உயிரியல் ஊக்கிகள்; அவை தாம் ஊக்குவிக்கும் தாக்கத்தின் ஏவல் சக்தியை (activation energy) குறைத்து தாக்க வீதத்தை அதிகரிக்கின்றன.
  3. அனேகமான நொதியங்கள் வெப்ப உறுதியற்றவை / வெப்ப உணர்திறனுள்ளவை (heat labile).
  4. இவற்றின் இருப்பு தாக்கத்தின் இறுதி விளைபொருட்களின் (end products) தன்மையை அல்லது இயல்பை மாற்றுவதில்லை.
  5. நொதியங்கள் கீழ்ப்படைக்குப் (substrate) பெரிதும் தனித்துவமானவை (substrate specific).
  6. அனேகமான நொதியத்தாக்கங்கள் மீளத்தக்கவை (reversible).
  7. நொதியச் செயற்பாட்டின் வீதம் pH, வெப்பநிலை, கீழ்ப்படைச் செறிவு, நிரோதிகள் ஆகியவற்றால் பாதிக்கப்படும்.
  8. நொதியங்கள் தாக்கத்தின்போது பயன்படுத்தப்படுவதில்லை (செலவழிக்கப்படுவதில்லை).
  9. நொதியங்கள் தாக்கம் நடைபெறும் உயிர்ப்பு மையங்களைக் (active sites) கொண்டவை.
  10. சில நொதியங்களுக்குப் புரதமல்லாத கூறுகள் தேவை; இவை துணைக்காரணிகள் (cofactors) எனப்படும்.
பரீட்சைக் குறிப்பு: நொதியம் ஏவல் சக்தியை (activation energy) குறைக்கிறது; வெப்ப ஆற்றலை வழங்குவதில்லை. இறுதி விளைபொருட்களின் தன்மையை மாற்றுவதில்லை, தாக்கத்தில் செலவழிக்கப்படுவதுமில்லை.

நொதியத்தாக்கப் பொறிமுறை (Mechanism of Enzyme Action)

நொதியம் தொழிற்படும் தாக்கி (reactant) கீழ்ப்படை (substrate) எனப்படும். நொதியம் அதன் கீழ்ப்படையுடன் இணைந்து நொதிய-கீழ்ப்படைச் சிக்கலை (enzyme-substrate complex) தோற்றுவிக்கும். இச்சிக்கல் தோன்றும்போது நொதியத்தின் ஊக்கிச் செயற்பாடு கீழ்ப்படையை விளைபொருளாக (product) மாற்றுகிறது.

நொதியம் + கீழ்ப்படை ⇌ நொதிய-கீழ்ப்படைச் சிக்கல் → நொதியம் + விளைபொருள்

ஒவ்வொரு நொதியத்தாலும் ஊக்குவிக்கப்படும் தாக்கம் மிகவும் தனித்துவமானது; இத்தனித்துவம் நொதியத்தின் வடிவத்தின் விளைவாகும். கீழ்ப்படை நொதியத்தின் ஒரு விசேட பிரதேசத்தில் இணையும்; இப்பிரதேசம் உயிர்ப்பு மையம் (active site) எனப்படும். உயிர்ப்பு மையம் சில எமினோ அமிலங்களால் (amino acids) மட்டுமே ஆனது; ஏனைய அமிலங்கள் மூலக்கூறின் வடிவத்தைப் பேண உதவுகின்றன.

உயிர்ப்பு மையத்தின் வடிவம் எப்போதும் கீழ்ப்படைக்கு ப+ரணமாக நிரப்புகின்றதாக இருக்காது. நொதியங்கள் திடமான கட்டமைப்புகள் அல்ல; கீழ்ப்படை இணையும்போது அவற்றுக்கிடையான இடைத்தாக்கம் உயிர்ப்பு மையத்தின் வடிவத்தைச் சிறிது மாற்றி, கீழ்ப்படையும் உயிர்ப்பு மையமும் ஒன்றுக்கொன்று நிரப்பும்படியாக்குகிறது. இதுவே தூண்டப்பட்ட பொருத்தப் பொறிமுறை (induced fit mechanism). இந்த இறுக்கமான பொருத்தம் மூலக்கூறுகளை நெருங்கச் செய்வதோடு சரியான திசையமைப்பையும் (orientation) உறுதிசெய்து தாக்கத்தை ஊக்குவிக்கிறது. பின்னர் விளைபொருள் உயிர்ப்பு மையத்திலிருந்து விலகிச் செல்ல, நொதியம் மற்றொரு கீழ்ப்படையை ஏற்க தயாராகிறது.

துணைக்காரணிகள் (Cofactors)

சில நொதியங்களின் ஊக்கிச் செயற்பாட்டுக்கு அவசியமான புரதமல்லாத கூறுகள் துணைக்காரணிகள் எனப்படும். இவை நொதியங்களுடன் இரு வழிகளில் இணையும் — சில இறுக்கமாக நிரந்தரமாகப் பிணையும், சில தளர்வாகத் தற்காலிகமாகப் பிணையும். தளர்வாகப் பிணைந்தவை குறிப்பிட்ட நிபந்தனைகளில் மீளக்கூடியவை.

நொதியத் தாக்கங்களின் வீதத்தைப் பாதிக்கும் காரணிகள்

1. வெப்பநிலை (Temperature): வெப்பநிலை அதிகரிக்க மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரித்து, நொதியத்தின் உயிர்ப்பு மையத்துக்கும் கீழ்ப்படைக்கும் இடையான மோதுகைகளின் நிகழ்தகவு அதிகரிக்கும். இது சிறப்பு வெப்பநிலை (optimum temperature) வரை தொடரும்; அதன் பின் தாக்க வீதம் வேகமாக வீழ்ச்சியடையும். அனேக மனித நொதியங்களின் சிறப்பு வெப்பநிலை உடல் வெப்பநிலையை அண்மித்தது (35°C–40°C); வெந்நீர் ஊற்றுகளில் வாழும் பக்டீரியாவின் சிறப்பு வெப்பநிலை 70°C க்கு மேல்.

சிறப்பு வெப்பநிலையைத் தாண்டினால் உயிர்ப்பு மையத்தின் ஐதரசன் பிணைப்புகள், அயனிப் பிணைப்புகள் மற்றும் பிற வலுக்குறைந்த பிணைப்புகள் சிதைந்து உயிர்ப்பு மையத்தின் வடிவம் மாறும். இதனால் நிரப்பும் தன்மை இழக்கப்பட்டு நொதிய-கீழ்ப்படைப் பிணைப்பு தடைபடும். இந்நிகழ்வு இயற்கை அகற்றல் (denaturation) எனப்படும். மோதுகை வீதம் தொடர்ந்து அதிகரித்தாலும், ஒரு குறித்த வெப்பநிலையில் தாக்கம் முற்றாக நின்றுவிடும்.

2. pH: ஒவ்வொரு நொதியமும் ஒரு குறித்த pH வீச்சில் மிக வினைத்திறனாகச் செயற்படும்; உயர்ந்த தாக்க வீதம் ஏற்படும் pH ஆனது சிறப்பு pH (optimum pH) எனப்படும். சிறப்பு pH ஐ விடக் கூடினாலோ குறைந்தாலோ நொதிய-கீழ்ப்படைச் சிக்கலின் பிணைப்புகள் மாறி தொழிற்பாடு வீழ்ச்சியடையும். அனேக நொதியங்களின் சிறப்பு pH வீச்சு 6–8; ஆனால் விதிவிலக்குகள் உண்டு — பெப்சின் (pepsin) pH 2 இலும், திரிப்சின் (trypsin) pH 8 இலும் சிறப்பாகச் செயற்படும்.

3. கீழ்ப்படைச் செறிவு (Substrate concentration): கீழ்ப்படைச் செறிவு அதிகரிக்க, சரியான திசையமைப்புடனான மோதுகைகளின் நிகழ்தகவு அதிகரித்து வீதம் ஏறும். எனினும் ஒரு குறிப்பிட்ட செறிவுக்குப் பின் நொதிய மூலக்கூறுகள் நிறைவடைந்துவிடும் (saturated); அதன் பின் வீதம் மேலும் அதிகரிக்காது.

4. நிரோதிகள் (Inhibitors): கீழே விளக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக் குறிப்பு: வெப்பநிலை அதிகமாக → இயற்கை அகற்றல் (denaturation) → வீதம் வீழ்ச்சி. pH மாற்றமும் இயற்கை அகற்றலை ஏற்படுத்தலாம். கீழ்ப்படைச் செறிவு உச்சத்தில் வீதம் நிலைப்படும் (saturation), குறையாது.

நொதிய நிரோதிகள் (Enzyme Inhibitors)

போட்டிக்குரிய / போட்டியற்ற நிரோதிகள்
Competitive vs non-competitive inhibitors
Wikipedia → · CC

சில மூலக்கூறுகள் அல்லது அயன்கள் தேர்வுக்குரிய முறையில் நொதிய மூலக்கூறுகளுடன் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாகப் பிணைந்து, நொதிய-கீழ்ப்படைச் சிக்கல் தோன்றுவதைத் தடுக்கின்றன. இவை நிரோதிகள் (inhibitors) எனப்படும். இவை வலுக்குறைந்த இடைத்தாக்கங்களால் மீளத்தக்க முறையில் (reversible) பிணையலாம், அல்லது சகப்பிணைப்புகளால் (covalent bonds) மீளா முறையில் (irreversible) பிணையலாம். உ+ம்: மீளா நிரோதிகள் — நச்சுக்கள், விசங்கள்; மீளத்தக்க நிரோதிகள் — நுண்ணங்கிகளுக்கு எதிராகப் பயன்படும் மருந்துகள்.

பண்பு போட்டிக்குரிய நிரோதி (Competitive) போட்டியற்ற நிரோதி (Non-competitive)
பிணையும் இடம்உயிர்ப்பு மையம் (active site)உயிர்ப்பு மையம் தவிர்ந்த வேறு இடம்
வடிவம்கீழ்ப்படையின் வடிவத்தை ஒத்ததுகீழ்ப்படையை ஒத்ததல்ல
செயல்உயிர்ப்பு மையத்துக்காகக் கீழ்ப்படையுடன் போட்டியிடும்உயிர்ப்பு மையத்தின் வடிவத்தை மாற்றி தொழிலற்றதாக்கும்
கீழ்ப்படைச் செறிவு அதிகரிப்பால் மீளல்மீளக்கூடியது (ஆம்)மீளாது (இல்லை)

போட்டிக்குரிய நிரோதிகள்: இவற்றில் அனேகம் மீளத்தக்கவை. இவை கீழ்ப்படையின் வடிவத்தையும் தன்மையையும் ஒத்தவை; எனவே உயிர்ப்பு மையத்துக்காகக் கீழ்ப்படையுடன் போட்டியிடுகின்றன. கீழ்ப்படைக்குக் கிடைக்கும் உயிர்ப்பு மையங்களின் எண்ணிக்கை குறைந்து தாக்க வீதம் குறையும். கீழ்ப்படைச் செறிவை அதிகரிப்பதால் இந்நிலை மீளக்கூடியது.

போட்டியற்ற நிரோதிகள்: இவை கீழ்ப்படையுடன் போட்டியிடுவதில்லை. உயிர்ப்பு மையம் தவிர்ந்த நொதியத்தின் வேறு ஒரு பகுதியில் பிணைந்து, நொதிய மூலக்கூறின் வடிவத்தை மாற்றி உயிர்ப்பு மையத்தை நொதிய-கீழ்ப்படைச் சிக்கல் தோற்றுவிப்பதற்குக் குறைந்த வினைத்திறனுள்ளதாக்குகின்றன.

கலங்களில் நொதியச் செயற்பாட்டின் ஒழுங்காக்கல்

அலோஸ்ரெறிக் நொதி மாதிரி
Allosteric enzyme model
Wikipedia → · CC

அலோஸ்ரெறிக் ஒழுங்காக்கம் (Allosteric regulation): கலங்களில் இயற்கையாக நொதியச் செயற்பாட்டை ஒழுங்காக்கும் மூலக்கூறுகள் பல சந்தர்ப்பங்களில் மீளக்கூடிய போட்டியற்ற நிரோதிகள் போல் செயற்படும். ஒழுங்காக்க மூலக்கூறுகள் (ஏவிகள் / நிரோதிகள்) உயிர்ப்பு மையம் தவிர்ந்த ஒழுங்காக்கும் தானங்களில் (allosteric site) சகப்பிணைப்பற்ற இடைத்தாக்கங்களால் பிணைந்து நொதியத்தின் வடிவத்தையும் தொழிலையும் பாதித்து, செயற்பாட்டை ஏவலாம் அல்லது நிரோதிக்கலாம். அலோஸ்ரெறிக் நொதியங்கள் பெரும்பாலும் இரண்டு அல்லது மேற்பட்ட உபஅலகுகளால் (subunits) ஆனவை; ஒரு உபஅலகின் வடிவ மாற்றம் ஏனைய எல்லா உபஅலகுகளுக்கும் கடத்தப்படும். உ+ம்: ADP ஒரு ஏவியாகச் செயற்பட்டு ATP உற்பத்தியைத் தூண்டும்; ATP மிகுதியாகும்போது அதே நொதியத்துடன் நிரோதியாகப் பிணைந்து இறக்கச்செயலைக் (catabolism) குறைக்கும்.

கூட்டுறவு (Cooperativity): ஒரு கீழ்ப்படை மூலக்கூறு பிணைவது மற்ற உயிர்ப்பு மையங்களின் பிணைப்பை/செயற்பாட்டைத் தூண்டி ஊக்கித் தொழிலை அதிகரிக்கும். உ+ம்: ஹீமோகுளோபின் (நொதியமல்ல) — ஒரு O₂ பிணைவது ஏனைய பிணைப்பிடங்களின் வேட்கையை (affinity) அதிகரிக்கும்.

பின்னுட்ட நிரோதம் (Feedback inhibition): ஒரு அனுசேபப் பாதையின் இறுதி விளைபொருள் அப்பாதையின் ஒரு நொதியத்துடன் நிரோதமாகப் பிணைந்து, தேவைக்கு மேல் விளைபொருள் உற்பத்தியாவதைத் தடுக்கும். இதனால் இரசாயன வளங்களின் வீண் விரயம் தவிர்க்கப்படும்.

▶ காணொளி வளம் / Video Reference

Enzymes (Updated)
Amoeba Sisters

▶ YouTube-ல் காண / Watch on YouTube →

📝 NIE பரீட்சை மாதிரி வினாக்கள் / Exam-pattern Questions
உபபாடம் முடிந்ததும் நடத்தப்படும் பரீட்சை பாணியில். (பல்தேர்வு + கட்டமைப்பு + கட்டுரை)
1. நொதியம் ஒரு தாக்கத்தில் எதைக் குறைக்கிறது? / An enzyme lowers which of the following in a reaction?
  1. ஏவல் சக்தி (activation energy) / Activation energy
  2. வெப்ப ஆற்றல் / Heat energy
  3. விளைபொருளின் தன்மை / Nature of the product
  4. கீழ்ப்படைச் செறிவு / Substrate concentration
  5. pH
பதில் / Answer
(1) ஏவல் சக்தி (activation energy) / Activation energy — நொதியம் ஏவல் சக்தியைக் குறைத்து வீதத்தை அதிகரிக்கிறது.
2. அனேகமான நொதியங்கள் எவ்வகை மூலக்கூறுகள்? / Most enzymes are which type of molecule?
  1. நாரிழைப் புரதங்கள் / Fibrous proteins
  2. கோளப்புரதங்கள் (globular proteins) / Globular proteins
  3. லிப்பிட்டுகள் / Lipids
  4. பல்சக்கரைட்டுகள் / Polysaccharides
  5. நியூக்கிளிக் அமிலம் / Nucleic acids
பதில் / Answer
(2) கோளப்புரதங்கள் (globular proteins) / Globular proteins — அனேக நொதியங்கள் கோளப்புரதங்கள்.
3. பின்வருவனவற்றில் நொதியத்தின் சரியான இயல்பு எது? / Which is a correct property of an enzyme?
  1. விளைபொருளின் தன்மையை மாற்றும் / Alters the nature of the product
  2. தாக்கத்தில் செலவழிக்கப்படும் / Used up in the reaction
  3. ஏவல் சக்தியை அதிகரிக்கும் / Raises activation energy
  4. தாக்கத்தில் செலவழிக்கப்படாது / Not consumed in the reaction
  5. வெப்ப உறுதியானது / Heat stable
பதில் / Answer
(4) தாக்கத்தில் செலவழிக்கப்படாது / Not consumed in the reaction — நொதியம் ஊக்கியாக செலவழிக்கப்படாது.
4. நொதியம் தொழிற்படும் தாக்கி? / The reactant on which an enzyme acts is the?
  1. விளைபொருள் / Product
  2. கீழ்ப்படை (substrate) / Substrate
  3. துணைக்காரணி / Cofactor
  4. நிரோதி / Inhibitor
  5. ஏவி / Activator
பதில் / Answer
(2) கீழ்ப்படை (substrate) / Substrate — கீழ்ப்படை (substrate).
5. நொதியத்தில் தாக்கம் நடைபெறும் பகுதி? / The region of the enzyme where the reaction occurs?
  1. ஒழுங்காக்கும் தானம் / Regulatory site
  2. உயிர்ப்பு மையம் (active site) / Active site
  3. அலோஸ்ரெறிக் தானம் / Allosteric site
  4. துணைக்காரணி / Cofactor
  5. -
பதில் / Answer
(2) உயிர்ப்பு மையம் (active site) / Active site — உயிர்ப்பு மையம் (active site).
6. நொதியத்தாக்கப் பொறிமுறையின் சரியான விளக்கம்? / The correct model of enzyme action is?
  1. பூட்டு-சாவி திடப் பொருத்தம் மட்டும் / Rigid lock-and-key only
  2. தூண்டப்பட்ட பொருத்தம் (induced fit) / Induced fit
  3. சீரற்ற மோதுகை / Random collision only
  4. சகப்பிணைப்புப் பொருத்தம் / Covalent fit
  5. -
பதில் / Answer
(2) தூண்டப்பட்ட பொருத்தம் (induced fit) / Induced fit — கீழ்ப்படை இணையும்போது உயிர்ப்பு மையம் வடிவம் மாறும் — induced fit.
7. நொதிய-கீழ்ப்படைச் சிக்கல் தோன்றியபின் எது வெளியேறும்? / After the enzyme-substrate complex forms, what is released?
  1. கீழ்ப்படை மட்டும் / Substrate only
  2. விளைபொருள் (product) / Product
  3. துணைக்காரணி / Cofactor
  4. ஏவல் சக்தி / Activation energy
  5. -
பதில் / Answer
(2) விளைபொருள் (product) / Product — விளைபொருள் வெளியேற நொதியம் மீண்டும் தயாராகும்.
8. உயிர்ப்பு மையம் முக்கியமாக எதனால் ஆனது? / The active site is formed mainly by?
  1. சில எமினோ அமிலங்கள் (amino acids) / A few amino acids
  2. லிப்பிட்டுகள் / Lipids
  3. நியூக்கிளியோட்டைடுகள் / Nucleotides
  4. மோனோசக்கரைட்டுகள் / Monosaccharides
  5. -
பதில் / Answer
(1) சில எமினோ அமிலங்கள் (amino acids) / A few amino acids — உயிர்ப்பு மையம் சில எமினோ அமிலங்களால் ஆனது.
9. சேதனத் துணைக்காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Organic cofactors are called?
  1. துணைநொதியங்கள் (coenzymes) / Coenzymes
  2. அயனிகள் / Ions
  3. அலோஸ்ரெறிக் தானம் / Allosteric sites
  4. விளைபொருட்கள் / Products
  5. -
பதில் / Answer
(1) துணைநொதியங்கள் (coenzymes) / Coenzymes — சேதனத் துணைக்காரணி = துணைநொதியம் (coenzyme).
10. பின்வருவனவற்றில் சேதனத் துணைக்காரணிக்கு (coenzyme) உதாரணம்? / Which is an example of a coenzyme (organic cofactor)?
  1. Zn²⁺
  2. NAD⁺
  3. Fe²⁺
  4. Cu²⁺
  5. Mg²⁺
பதில் / Answer
(2) NAD⁺ — NAD⁺, FAD, பயோட்டின் — வைட்டமின் வழிப்பொருட்கள்.
11. பின்வருவனவற்றில் அசேதனத் துணைக்காரணி? / Which is an inorganic cofactor?
  1. FAD
  2. பயோட்டின் / Biotin
  3. Zn²⁺
  4. NAD⁺
  5. -
பதில் / Answer
(3) Zn²⁺ — Zn²⁺, Fe²⁺, Cu²⁺ — அசேதனத் துணைக்காரணிகள்.
12. நொதிய வீதத்தைப் பாதிக்காத காரணி எது? / Which does NOT affect enzyme rate?
  1. வெப்பநிலை / Temperature
  2. pH
  3. கீழ்ப்படைச் செறிவு / Substrate concentration
  4. நிரோதிகள் / Inhibitors
  5. ஒளி நிறம் / Colour of light
பதில் / Answer
(5) ஒளி நிறம் / Colour of light — வெப்பநிலை, pH, கீழ்ப்படைச் செறிவு, நிரோதிகள் மட்டுமே NIE குறிக்கிறது.
13. அனேக மனித நொதியங்களின் சிறப்பு வெப்பநிலை வீச்சு? / Optimum temperature range of most human enzymes?
  1. 0°C–10°C
  2. 35°C–40°C
  3. 50°C–60°C
  4. 70°C க்கு மேல் / Above 70°C
  5. 100°C
பதில் / Answer
(2) 35°C–40°C — உடல் வெப்பநிலையை அண்மித்தது (≈37°C).
14. வெந்நீர் ஊற்று பக்டீரியாவின் சிறப்பு வெப்பநிலை? / Optimum temperature of hot-spring bacteria?
  1. 37°C க்கு கீழ் / Below 37°C
  2. 70°C க்கு மேல் / Above 70°C
  3. 0°C
  4. 20°C
  5. -
பதில் / Answer
(2) 70°C க்கு மேல் / Above 70°C — 70°C க்கு மேல்.
15. சிறப்பு வெப்பநிலையைத் தாண்டியதும் நொதியத்துக்கு என்ன நிகழும்? / Beyond the optimum temperature, what happens?
  1. வீதம் தொடர்ந்து அதிகரிக்கும் / Rate keeps rising
  2. இயற்கை அகற்றல் (denaturation) → வீதம் வீழ்ச்சி / Denaturation → rate falls
  3. வீதம் மாறாது / Rate unchanged
  4. துணைக்காரணி உருவாகும் / Cofactor forms
  5. -
பதில் / Answer
(2) இயற்கை அகற்றல் (denaturation) → வீதம் வீழ்ச்சி / Denaturation → rate falls — வலுக்குறைந்த பிணைப்புகள் சிதைந்து denaturation; வீதம் வீழ்ச்சி.
16. இயற்கை அகற்றலின்போது (denaturation) சிதைவடைவன? / During denaturation, which bonds are disrupted?
  1. சகப்பிணைப்புகள் மட்டும் / Only covalent bonds
  2. ஐதரசன், அயனி மற்றும் வலுக்குறைந்த பிணைப்புகள் / Hydrogen, ionic and other weak bonds
  3. பெப்டைட் பிணைப்புகள் / Peptide bonds
  4. கிளைக்கோசிடிக் பிணைப்பு / Glycosidic bonds
  5. -
பதில் / Answer
(2) ஐதரசன், அயனி மற்றும் வலுக்குறைந்த பிணைப்புகள் / Hydrogen, ionic and other weak bonds — உயிர்ப்பு மையத்தின் ஐதரசன்/அயனி/வலுக்குறைந்த பிணைப்புகள்.
17. பெப்சின் (pepsin) சிறப்பாகச் செயற்படும் pH? / Pepsin works best at which pH?
  1. pH 2
  2. pH 7
  3. pH 8
  4. pH 11
  5. pH 14
பதில் / Answer
(1) pH 2 — பெப்சின் — pH 2.
18. திரிப்சினின் (trypsin) சிறப்பு pH? / The optimum pH for trypsin?
  1. pH 2
  2. pH 4
  3. pH 8
  4. pH 1
  5. -
பதில் / Answer
(3) pH 8 — திரிப்சின் — pH 8.
19. அனேக நொதியங்களின் சிறப்பு pH வீச்சு? / Optimum pH range for most enzymes?
  1. 1–2
  2. 3–4
  3. 6–8
  4. 11–12
  5. 13–14
பதில் / Answer
(3) 6–8 — அனேக நொதியங்கள் — 6–8 (விதிவிலக்கு பெப்சின், திரிப்சின்).
20. கீழ்ப்படைச் செறிவு மிக அதிகமானபின் வீதம்? / At very high substrate concentration, the rate?
  1. தொடர்ந்து அதிகரிக்கும் / Keeps increasing
  2. நிறைவடைந்து நிலைப்படும் (saturation) / Plateaus due to saturation
  3. விரைவாக வீழும் / Falls rapidly
  4. சுழியமாகும் / Drops to zero
  5. -
பதில் / Answer
(2) நிறைவடைந்து நிலைப்படும் (saturation) / Plateaus due to saturation — நொதியம் நிறைவடைந்தபின் வீதம் மேலும் அதிகரிக்காது.
21. நொதிய-கீழ்ப்படைச் சிக்கல் தோன்றுவதைத் தடுக்கும் மூலக்கூறுகள்? / Molecules that prevent formation of the enzyme-substrate complex?
  1. ஏவிகள் / Activators
  2. நிரோதிகள் (inhibitors) / Inhibitors
  3. துணைக்காரணிகள் / Cofactors
  4. விளைபொருட்கள் / Products
  5. -
பதில் / Answer
(2) நிரோதிகள் (inhibitors) / Inhibitors — நிரோதிகள் (inhibitors).
22. மீளா நிரோதிகளுக்கு (irreversible) உதாரணம்? / An example of irreversible inhibitors?
  1. நச்சுக்கள், விசங்கள் / Toxins, poisons
  2. NAD⁺
  3. துணைநொதியம் / Coenzyme
  4. கீழ்ப்படை / Substrate
  5. -
பதில் / Answer
(1) நச்சுக்கள், விசங்கள் / Toxins, poisons — நச்சுக்கள்/விசங்கள் சகப்பிணைப்பால் மீளாமல் பிணையும்.
23. போட்டிக்குரிய நிரோதி (competitive) பிணையும் இடம்? / A competitive inhibitor binds to?
  1. உயிர்ப்பு மையம் / The active site
  2. அலோஸ்ரெறிக் தானம் / The allosteric site
  3. கருவுறை / Nuclear envelope
  4. துணைக்காரணி / The cofactor
  5. -
பதில் / Answer
(1) உயிர்ப்பு மையம் / The active site — உயிர்ப்பு மையத்துக்காக கீழ்ப்படையுடன் போட்டியிடும்.
24. போட்டிக்குரிய நிரோதத்தின் தாக்கம் எவ்வாறு மீட்கப்படலாம்? / Competitive inhibition can be reversed by?
  1. கீழ்ப்படைச் செறிவை அதிகரித்தல் / Increasing substrate concentration
  2. வெப்பநிலையைக் குறைத்தல் / Lowering temperature
  3. துணைக்காரணியை அகற்றுதல் / Removing the cofactor
  4. pH ஐ உயர்த்துதல் / Raising pH
  5. -
பதில் / Answer
(1) கீழ்ப்படைச் செறிவை அதிகரித்தல் / Increasing substrate concentration — கீழ்ப்படைச் செறிவு அதிகரிப்பால் போட்டி வெல்லப்படும்.
25. போட்டியற்ற நிரோதி (non-competitive) பிணையும் இடம்? / A non-competitive inhibitor binds to?
  1. உயிர்ப்பு மையம் / The active site
  2. உயிர்ப்பு மையம் தவிர்ந்த வேறு இடம் / A site other than the active site
  3. கீழ்ப்படை / The substrate
  4. விளைபொருள் / The product
  5. -
பதில் / Answer
(2) உயிர்ப்பு மையம் தவிர்ந்த வேறு இடம் / A site other than the active site — உயிர்ப்பு மையம் அல்லாத பகுதியில் பிணைந்து வடிவத்தை மாற்றும்.
26. போட்டியற்ற நிரோதம் உயிர்ப்பு மையத்தில் ஏற்படுத்துவது? / A non-competitive inhibitor affects the active site by?
  1. அதன் வடிவத்தை மாற்றி வினைத்திறனற்றதாக்குதல் / Changing its shape, making it less effective
  2. நேரடியாக அதில் பிணைதல் / Binding directly in it
  3. துணைக்காரணியாதல் / Acting as a cofactor
  4. ஏவல் சக்தியை அதிகரித்தல் / Raising activation energy
  5. -
பதில் / Answer
(1) அதன் வடிவத்தை மாற்றி வினைத்திறனற்றதாக்குதல் / Changing its shape, making it less effective — வடிவம் மாறி உயிர்ப்பு மையம் குறைந்த வினைத்திறன்.
27. கீழ்ப்படைச் செறிவை அதிகரிப்பால் மீட்க முடியாத நிரோதம்? / Which inhibition is NOT reversed by increasing substrate?
  1. போட்டிக்குரிய / Competitive
  2. போட்டியற்ற / Non-competitive
  3. -
  4. -
  5. -
பதில் / Answer
(2) போட்டியற்ற / Non-competitive — போட்டியற்ற நிரோதம் கீழ்ப்படைச் செறிவால் மீட்கப்படாது.
28. நொதியங்களை இயற்கையாக ஒழுங்காக்கும் பல மூலக்கூறுகள் எவை போல் செயற்படும்? / Natural regulatory molecules of enzymes behave like?
  1. போட்டிக்குரிய நிரோதிகள் / Competitive inhibitors
  2. மீளக்கூடிய போட்டியற்ற நிரோதிகள் / Reversible non-competitive inhibitors
  3. கீழ்ப்படைகள் / Substrates
  4. துணைநொதியங்கள் / Coenzymes
  5. -
பதில் / Answer
(2) மீளக்கூடிய போட்டியற்ற நிரோதிகள் / Reversible non-competitive inhibitors — அலோஸ்ரெறிக் ஒழுங்காக்க மூலக்கூறுகள் மீளக்கூடிய போட்டியற்ற நிரோதி போல்.
29. அலோஸ்ரெறிக் தானம் (allosteric site) எங்கே அமைந்துள்ளது? / Where is the allosteric site located?
  1. உயிர்ப்பு மையத்தில் / In the active site
  2. உயிர்ப்பு மையம் தவிர்ந்த ஒழுங்காக்கும் தானத்தில் / At a regulatory site other than the active site
  3. கீழ்ப்படையில் / On the substrate
  4. துணைக்காரணியில் / On the cofactor
  5. -
பதில் / Answer
(2) உயிர்ப்பு மையம் தவிர்ந்த ஒழுங்காக்கும் தானத்தில் / At a regulatory site other than the active site — உயிர்ப்பு மையம் தவிர்ந்த ஒழுங்காக்கும் தானம்.
30. பின்னுட்ட நிரோதத்தில் (feedback inhibition) நொதியத்தை நிரோதிப்பது? / In feedback inhibition, the enzyme is inhibited by?
  1. தொடக்கக் கீழ்ப்படை / The initial substrate
  2. பாதையின் இறுதி விளைபொருள் / The end product of the pathway
  3. ஒரு துணைக்காரணி / A cofactor
  4. ஒரு நச்சு / A toxin
  5. -
பதில் / Answer
(2) பாதையின் இறுதி விளைபொருள் / The end product of the pathway — இறுதி விளைபொருள் நொதியத்துடன் பிணைந்து மிகை உற்பத்தியைத் தடுக்கும்.
31. கூட்டுறவில் (cooperativity) எடுத்துக்காட்டாகக் கூறப்படும் (நொதியமல்லாத) மூலக்கூறு? / The (non-enzyme) molecule cited as an example of cooperativity?
  1. ஹீமோகுளோபின் / Haemoglobin
  2. ATP
  3. NAD⁺
  4. பெப்சின் / Pepsin
  5. -
பதில் / Answer
(1) ஹீமோகுளோபின் / Haemoglobin — ஹீமோகுளோபின் — ஒரு O₂ பிணைவது ஏனைய தானங்களின் வேட்கையை அதிகரிக்கும்.
32. ATP மிகுதியாகும்போது இறக்கச்செயல் (catabolism) எவ்வாறு பாதிக்கப்படும்? / When ATP exceeds demand, catabolism is?
  1. துரிதப்படுத்தப்படும் / Sped up
  2. மெதுவாக்கப்படும் (ATP அலோஸ்ரெறிக் நிரோதியாக) / Slowed (ATP as allosteric inhibitor)
  3. மாறாது / Unchanged
  4. நிறுத்தப்பட்டு கட்டமைப்பாகும் / Reversed to anabolism only
  5. -
பதில் / Answer
(2) மெதுவாக்கப்படும் (ATP அலோஸ்ரெறிக் நிரோதியாக) / Slowed (ATP as allosteric inhibitor) — ATP நிரோதியாகப் பிணைந்து இறக்கச்செயலை மெதுவாக்கும்.
33. நொதியங்கள் உற்பத்தியாகும் இடம்? / Enzymes are produced in?
  1. உயிரற்ற சூழல் / The non-living environment
  2. உயிருள்ள கலங்கள் / Living cells
  3. குருதிச் சீரம் மட்டும் / Blood serum only
  4. வளி மண்டலம் / The atmosphere
  5. -
பதில் / Answer
(2) உயிருள்ள கலங்கள் / Living cells — நொதியங்கள் உயிருள்ள கலங்களில் உற்பத்தியாக்கப்படுகின்றன.
(10 புள்ளிகள் / marks)
கட்டமைப்பு வினா / Structured question
  1. நொதியத்தாக்கத்தின் தூண்டப்பட்ட பொருத்தப் பொறிமுறையை (induced fit) விபரிக்க. / Describe the induced fit mechanism of enzyme action. (3)
  2. வெப்பநிலை சிறப்பு வெப்பநிலையைத் தாண்டியதும் நொதிய வீதம் ஏன் வீழ்ச்சியடைகிறது என விளக்குக. / Explain why enzyme rate falls beyond the optimum temperature. (3)
  3. போட்டிக்குரிய, போட்டியற்ற நிரோதிகளை இரு வழிகளில் வேறுபடுத்துக. / Give two differences between competitive and non-competitive inhibitors. (2)
  4. சேதன, அசேதனத் துணைக்காரணிகளுக்கு தலா ஓர் உதாரணம் தருக. / Give one example each of an organic and an inorganic cofactor. (2)
மாதிரி விடை / Model answer
(அ) கீழ்ப்படை உயிர்ப்பு மையத்தில் இணையும்போது இடைத்தாக்கம் உயிர்ப்பு மையத்தின் வடிவத்தைச் சிறிது மாற்றி நிரப்பும்படியாக்குகிறது; இறுக்கப் பொருத்தம் மூலக்கூறுகளை நெருங்கச் செய்து சரியான திசையமைப்பை உறுதிசெய்து தாக்கத்தை ஊக்குவிக்கும்; விளைபொருள் விலகி நொதியம் மீள்பயனாகும். (3)
(ஆ) ஐதரசன்/அயனி/வலுக்குறைந்த பிணைப்புகள் சிதைந்து உயிர்ப்பு மையத்தின் வடிவம் மாறும் (இயற்கை அகற்றல்); நிரப்பும் தன்மை இழந்து நொதிய-கீழ்ப்படைப் பிணைப்பு தடைபடும்; எனவே வீதம் வீழ்ச்சியடைந்து நின்றுவிடும். (3)
(இ) போட்டிக்குரியது — உயிர்ப்பு மையத்தில் கீழ்ப்படை போல் பிணையும், கீழ்ப்படைச் செறிவால் மீளக்கூடியது; போட்டியற்றது — வேறு இடத்தில் பிணைந்து வடிவம் மாற்றும், கீழ்ப்படைச் செறிவால் மீளாது. (2)
(ஈ) சேதனம் — NAD⁺/FAD/பயோட்டின்; அசேதனம் — Zn²⁺/Fe²⁺/Cu²⁺. (2)
(கட்டுரை / essay)
கட்டுரை வினா / Essay question

நொதிய வீதத்தைப் பாதிக்கும் காரணிகளையும் (வெப்பநிலை, pH, கீழ்ப்படைச் செறிவு, நிரோதிகள்) கலங்களில் நொதியச் செயற்பாட்டின் ஒழுங்காக்கலையும் விபரிக்க. / Describe the factors affecting enzyme rate (temperature, pH, substrate concentration, inhibitors) and the regulation of enzyme activity in cells.

விடைக் குறிப்புகள் / Answer outline
• வெப்பநிலை — மோதுகை ↑ → சிறப்பு வெப்பநிலை வரை வீதம் ↑; பின் இயற்கை அகற்றல் → வீழ்ச்சி (மனிதன் ≈37°C).
• pH — சிறப்பு pH இல் உச்ச வீதம்; விலகல் → வீழ்ச்சி; பெப்சின் pH 2, திரிப்சின் pH 8.
• கீழ்ப்படைச் செறிவு — அதிகரிப்பால் வீதம் ↑, நிறைவடைந்தபின் நிலைப்படும்.
• நிரோதிகள் — போட்டிக்குரிய (உயிர்ப்பு மையம், கீழ்ப்படைச் செறிவால் மீளும்) / போட்டியற்ற (வேறு இடம், மீளாது); மீளா — நச்சு.
• ஒழுங்காக்கல் — அலோஸ்ரெறிக் ஏவல்/நிரோதம், கூட்டுறவு (ஹீமோகுளோபின்), பின்னுட்ட நிரோதம் (இறுதி விளைபொருள்).
விரைவு சரிபார்ப்பு / Quick recall
Q. போட்டிக்குரிய நிரோதத்தை எவ்வாறு மீட்கலாம்; போட்டியற்றதை ஏன் மீட்க முடியாது? / How is competitive inhibition reversed, and why is non-competitive not?
பதில் / Show answer
போட்டிக்குரியது உயிர்ப்பு மையத்தில் கீழ்ப்படையுடன் போட்டியிடுவதால் கீழ்ப்படைச் செறிவை அதிகரித்தால் மீளும். போட்டியற்றது வேறு இடத்தில் பிணைந்து உயிர்ப்பு மையத்தின் வடிவத்தையே மாற்றுவதால் கீழ்ப்படைச் செறிவால் மீளாது. / Competitive competes at the active site, so excess substrate outcompetes it; non-competitive changes the active site shape, so extra substrate cannot help.
⏱ விரைவு மீட்டல் — 60 வினாடி
இந்த உட்பகுதியின் கட்டாயப் புள்ளிகள்
  • உயிரியல் வினையூக்கி; செயற்பாட்டு ஆற்றலைக் (activation energy) குறைக்கும்.
  • வினைத்தளம் (active site); பூட்டு-திறப்பு / தூண்டப்பட்ட பொருத்தம்.
  • பாதிப்பு: வெப்பம், pH, செறிவு; தடுப்பிகள் (போட்டி / போட்டியற்ற).
🎯 தேர்வு எடை ★★★☆☆
✅ விரைவுச் சோதனை — 3 வினா