🫁
சுவாசத் தொகுதி
Respiratory System
🤔 ஏன்? நுரையீரலின் Alveoli (காற்றுப்பைகள்) மிக மெல்லிய சுவரும் பரந்த மேற்பரப்பும் கொண்டிருப்பதால், O₂/CO₂ வாயு பரிமாற்றம் விரைவாக நிகழ்கிறது.
🚬 அன்றாட உதாரணம்: புகைபிடித்தல் Alveoli-ன் சுவர்களை சேதப்படுத்தி மேற்பரப்பைக் குறைப்பதால், emphysema போன்ற நோய்களில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
🔵 பாகங்கள் · Parts
- மூக்குக் குழி (Nasal cavity)
- தொண்டை (Pharynx)
- குரல்வளை (Larynx)
- வாதனாளி (Trachea)
- சுவாசப்பை குழாய் (Bronchus)
- சுவாசப்பை சிறு குழாய் (Bronchiole)
- சிற்றறைகள் (Alveoli)
🟦 படிமுறைகள் · Steps
- சுவாசப்பை – புறச்சூழல் வாயுப்பரிமாற்றம்
- சிற்றறை வாயுப்பரிமாற்றம்
- கலச்சுவாசம் (Cellular respiration)
🦠 நோய்கள் · Diseases
| தடிமன் | வைரஸ் |
| பிடிசுரம் | வைரஸ் / பற்றீரியா |
| தொய்வு | ஒவ்வாமை · வாதனாளி உட்புற வீக்கம் |
| புரோன்கைற்றிசு | வைரஸ் / பற்றீரியா தொற்று |
| காச நோய் | பற்றீரியா (M. tuberculosis) |
| சிலிக்கோசிஸ் | கிரனைற் · நிலக்கரி · சுரங்க மணல் |
| அஸ்பஸ்டோசிஸ் | அஸ்பஸ்டர் துணிக்கைகள் |
🫁 மனித சுவாசத் தொகுதி · Human Respiratory System
🔍 பெரிதாக்க அழுத்துக
படம் (சொடுக்கி பெரிதாக்குக) · Wikimedia Commons — LadyofHats, public domain
🌬️ உட்சுவாச வளியின் மாற்றங்கள் · Conditioning of inhaled air
- உட்சுவாச வளி ஈரமாதல் (humidified)
- உடல் வெப்பநிலைக்கு மாறுதல் · தூசுத்துணிக்கைகள் வடிகட்டல்
- நுண்ணங்கிகள் அகற்றப்படுதல்
🔁 சுவாசமேற்பரப்பு · Gas Exchange Surface
🔍 பெரிதாக்க
- மெல்லியது (one cell thick)
- ஈரலிப்பானது (moist)
- அதிகளவு மயிர்த்துளை குழாய்கள்
- சுருங்கி விரியக்கூடியது
↕️ சுவாசப் பொறிமுறை · Breathing Mechanism
⬆️ உட்சுவாசம் · Inhalation
- • பழுக்கிடையான தசை சுருங்குதல்
- • விலா எலும்பு, மார்பு பட்டை மேல்நோக்கி உயர்தல்
- • மார்பு முன்நோக்கி தள்ளப்படுதல்
- • பிரிமென்தகட்டுத் தசை சுருங்கல்
- • நெஞ்சறை, சுவாசப்பை கனவளவு அதிகரித்தல்
- • சுவாசப்பையினுள் வளி செல்லுதல்
⬇️ வெளிச்சுவாசம் · Exhalation
- • பழுக்கிடையான தசை தளர்தல்
- • விலா எலும்பு, மார்பு பட்டை கீழ்நோக்கி இறக்கம்
- • மார்பு உள்நோக்கி தள்ளப்படுதல்
- • பிரிமென்தகட்டுத் தசை தளர்தல்
- • நெஞ்சறை, சுவாசப்பை கனவளவு குறைதல்
- • சுவாசப்பையில் இருந்து வளி வெளியேறுதல்
⚡ கலச்சுவாசம் · Cellular Respiration
காற்றுச் சுவாசம் · Aerobic O₂ உள்ளபோது
அனைத்து உயிரினம்:
குளுக்கோஸ் + ஒட்சிசன் ⟶ காபனீர் ஒட்சைட்டு + நீர் + சக்தி (38 ATP)
காற்றின்றிய சுவாசம் · Anaerobic O₂ இல்லாதபோது
தாவரம் / ஈஸ்ட்:
குளுக்கோஸ் ⟶ எதைல் அற்கஹோல் + காபனீர் ஒட்சைட்டு + சக்தி (2 ATP)
விலங்கு (தசை):
குளுக்கோஸ் ⟶ இலக்றிக் அமிலம் + சக்தி (2 ATP)