📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2018

📄 சா/த தமிழ் — 2018 (டிசம்பர்)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper II · இலக்கண வினாக்கள் — 10 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(i) "என்மேல் சந்தேகமா? நேத்து பெரியவரே என்கிட்ட சொன்னாரு" என்ற பேச்சு வழக்கு வாக்கியத்தை எழுத்து வழக்காக மாற்றி எழுதுக.

(ii) பின்வரும் வாக்கியத்துக்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளையிட்டு மீண்டும் எழுதுக:
"காகம் கண்டதைத் தின்னும் ஒரு பறவையான போதும் தனது உடம்பைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறது"

(iii) "சுந்தரனார் நேற்றுமாலை இறையடி சேர்ந்தார்" என்பதில் மங்கலமாக அமைந்த தொடர் யாது?

(iv) 'நான் அந்தப் பணியைச் செய்யமாட்டேன்' என்பதில் இடம்பெற்றுள்ள எதிர்மறை இடைநிலை யாது?

(v) 'தறி' என்ற சொல் பெயராகவும் வினையாகவும் அமையுமாறு தலா ஒவ்வொரு வாக்கியம் எழுதுக.

(vi) "சூரியன் தவிதவிக்கும் நெடுஞ்சாலையோரம் பாரம் தூக்கி நடக்கிறாள் மூதாட்டி" — இந்த வாக்கியத்திலுள்ள எழுவாய், பயனிலை ஆகியவற்றை எடுத்துக்காட்டுக.

(vii) (அ) "பாடசாலையின் அடுத்த தவணை 8 ஆம் திகதி ஆரம்பமாகும்."
(ஆ) "மாணவர்கள் யாவரும் சீருடை அணிந்து பாடசாலைக்கு வரவேண்டும்."
இவ்விரு வாக்கியங்களில் அறிவித்தலாக அமைந்த வாக்கியம் எது? அறிவுறுத்தலாக அமைந்த வாக்கியம் எது?

(viii) பின்வரும் மூன்று வாக்கியங்களையும் இணைத்து தனியொரு வாக்கியமாக எழுதுக:
நான் கண்டிக்குச் சென்றேன். நீ கண்டிக்குச் சென்றாய். அவள் கண்டிக்குச் சென்றாள்.

(ix) மாதிரி நிரலொன்றுக்கு ஏற்ற விதத்தில் பின்வரும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி மீண்டும் எழுதுக:
புரை, நன்றியுரை, மங்கல விளக்கேற்றல், தலைமையுரை, பரிசில் வழங்கல், சிறப்புரை

(x) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக:
'பொலிந்தசெழுந்தாதிறைக்கும்'
வினா 2. Paper II · கட்டுரை / மேடைப்பேச்சு / உரையாடல் / சிறுகதை — ஒன்றை தேர்க (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து ~250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) இன்று உலகில் காலநிலை மாற்றங்களால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. நமது நாட்டிலும் அவ்வாறே நிலச்சரிவு, கடற்சீற்றம், வெள்ளப்பெருக்கு எனப்பலவாறாக நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு இயற்கை மட்டுமன்றி நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். எனவே அனர்த்தங்கள் ஏற்படாதவாறு நம்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொருளில் ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) வருடந்தோறும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் நமது சமூகத்தின் உயிர்த்துடிப்பான பங்காளிகள். தாய், சகோதரி, தாரம், மகள் என அவர்கள் குடும்பத்தில் வாழ்பவர்கள். அதற்கும் மேலே பல வழிகளிலும் உழைப்பவர்கள். அவர்களைப் போற்றுதலும் பாதுகாத்தலும் நம் கடமை என்ற பொருளில் ஒரு மேடைப்பேச்சு.

(iii) இன்று இலத்திரனியல் ஊடகங்களுடாகவும் அறிவுப்பரப்புகை நிகழ்கிறது. குறிப்பாக இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் இது நடைபெறுகிறது. பாரம்பரியமான வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது. 'இணையம் வழி அறிவே சிறந்தது' என வாதிடும் ஒருவருக்கும் 'நூல்வழி வாசிப்பே சிறந்தது' என வாதிடும் இன்னொருவருக்கும் இடையிலான உரையாடல்.

(iv) கண்ணன் உமது வகுப்பில் வந்து சேர்ந்தபோது படிப்பில் நாட்டமற்று இருந்தான். ஆனால் ஆசிரியராக நீர் கவனம் கொண்டு சிறிது சிறிதாக நாட்டம் உருவாக்கினீர்கள். இன்று அவன் கல்வியில் முன்னேறி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவனாக இருக்கிறான். அவனை உருவாக்கிய ஆசிரியராகிய நீர் 'எண்ணிலடங்கா...' என்று தொடங்கும் ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper II · பண்பாடு உரைப்பகுதி சுருக்கம் — 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
பின்வரும் உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் எழுதுக (எண்ணிக்கை குறிப்பிடுக):

"அன்பு, பரிவு, மனித உறவு, சொந்தபந்தம், மனநிறைவு, அறிவதே ரசனை முதலியவை மனிதனுக்கு வசதிகளும் நலன்களும் தருகின்றன; மிகவும் நெருக்கம் தரும் பண்பாடு அத்தகைய காரியங்களைச் செய்கிறது. எனவேதான், மனிதன் பண்பாடு பற்றி மிக அக்கறை கொள்கிறான். டெர்ரி ஈகிள்டன் — வர்க்கம், சாதி, சமயம், மொழி, குணங்களாகவும் பண்பாடு வெளிப்படுகிறது. ஒற்றை குரலிலோ ஒற்றைக் குரலிலோ வெளிப்படுவதல்ல பண்பாடு. பலவகைப் பரிமாணங்கள் அதற்கு உண்டு. ஒருங்கிணைந்த ஒரு கூட்டுமொத்த வடிவமும் உயிர்ப்பும் அதற்கு உண்டு. மேலும் எந்தப் பண்பாடும் தனித்து இருப்பதில்லை. பிற பண்பாடுகளோடு உறவு கொண்டே வாழ்கிறது. பண்பாடுகள் அருகருகே வாழ்கின்றன; தொடர்பு கொள்கின்றன. பண்பாடுகள் எதிரெதிர் நிற்கும்போது, அவற்றின் தனித்தன்மைகளும் மரபுகளும் சிறப்புகளும் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய முரண்பாடுகளின் காரணமாக சமூக அமைப்புகளிலும் பிரச்சினைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது."
வினா 4 (கட்டாயம்). Paper II · கல்வி உரைப்பகுதி வினாக்கள் (10 புள்ளிகள்) த10·அ2
4. பின்வரும் உரைப்பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

"கல்வி மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்துகிறது. எனவே கல்வியை எல்லோரும் கற்கவேண்டும். மலைவாழைப்பழம் போன்ற கல்வியைக் கற்பதில் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். கற்காதவர் விலங்குக்கு நிகரானவர் என்பார் வள்ளுவர். மனிதனை மனிதனாக மாற்றுவது கல்வி. எனவே கல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும். மு.வரதராசன் (மு.வ.) அவர்கள் அடிப்படையில் கல்வியாளர். அவருடைய பட்டறிவின் துணைகொண்டு இங்கு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். நடைமுறையில் இன்றைய கல்விமுறையை மாற்றம் செய்ய வேண்டும் என்பது மு.வ.வின் கருத்தாகும். நினைவாற்றலை வளர்ப்பது கல்விக்கூடங்களின் நோக்கமாக அமையக்கூடாது. சிந்தனை ஆற்றலை வளர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து."

(i) கல்வியை ஏன் அனைவரும் கற்க வேண்டும்?
(ii) கல்வி பற்றி வள்ளுவர் கூறும் கருத்து யாது?
(iii) கல்வி ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டுமென இங்கு கூறப்பட்டுள்ளது?
(iv) பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவுசெய்க:
(அ) கல்வி பற்றிய மு.வ.வின் கருத்துக்கள் அவர் பட்டறிவால் விளைந்தவையாகும்.
(ஆ) இன்றைய கல்விமுறையில் மாற்றம் வேண்டாம் என்பது மு.வ.வின் கருத்தன்று.
(இ) கல்வி கற்பது இனிமையானதால் அதைப் பெறுவதில் மக்கள் மகிழ்ச்சியடைவர்.
(ஈ) கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதில் கட்டுரையாசிரியருக்கு உடன்பாடில்லை.
(v) கல்வி நிறுவனங்களின் நோக்கம் யாதென ஆசிரியர் எடுத்துரைக்கிறார்?
வினா 5. Paper II · விண்ணப்பக் கடிதம் அல்லது அறிவிப்பு (15 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்க:

(i) உமது கிராமத்தில் பல்வேறு வகையான கிராமியக் கலைகளை நிகழ்த்திவரும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் போதிய வருவாயற்றும் உரிய கெளரவமும் இன்றி வாழ்கின்றனர். கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் என்று உம்மைக் கருதிக்கொண்டு, இக்கலைஞர்களுக்கு உரிய கெளரவத்தையும் அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான உதவிகளையும் வழங்குமாறு கோரி, கலாசார அமைச்சருக்கு 100 சொற்களில் விண்ணப்பக் கடிதம் எழுதுக.

(ii) நீர் நமது வாழ்வுக்கு அத்தியாவசியமாகும். சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகுவதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும். அசுத்தமான நீரைப் பருகுவதனால் வாந்திபேதி முதலிய நோய்கள் ஏற்படும். எனவே சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சொற்களில் ஒரு அறிவிப்பு எழுதுக.
வினா 6 (கட்டாயம்). Paper III · சுருக்கமான விடை — இலக்கியம் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(i) "மெல்லியர்பாற் கல்வி விரும்பாத வீணரெல்லாம்
எல்லையில்லா இன்படைதற்கிடையூறென்றே இயம்பாய்"
(அ) மெல்லியர் என்போர் யாவர்?
(ஆ) இங்கு 'வீணர்' எனக் குறிப்பிடப்படுபவர் யாவர்?

(ii) "மாத மூன்று மழையுள்ள நாடு
வருஷ மூன்று விளைவுள்ள நாடு"
(அ) இங்கு குறிப்பிடப்படும் நாடு யாது?
(ஆ) 'விளைவு' என்பது எதனைக் குறிப்பிடுகிறது?

(iii) "பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளை"
(அ) 'பொய்கை ஊரன்' எந்த நிலத்தைச் சேர்ந்தவன்?
(ஆ) வளைகள் செறிந்தமைக்கான காரணம் யாது?

(iv) "கைராசிக்காரி நீங்கள்தான் தலப்புள்ள ஏந்தணும்"
(அ) 'கைராசிக்காரி' எனக் குறிப்பிடப்படுபவரின் பெயர் யாது?
(ஆ) 'தலப்புள்ள' எனக் குறிப்பிடப்படுவது யாது?

(v) "ஏலம்பூ வாய் எரியுறது கோரை சுமந்து
காலப்புனல்"
(அ) 'ஏலம்பூ வாய்' என்பதால் நீர் விளங்கிக்கொள்வது யாது?
(ஆ) 'காலப்புனல்' என்பதில் இடம்பெற்ற அணி யாது?

(vi) "கான் ஆள உனைவிடுத்த கண் இலா
அருளிலிதன் காதல் மைந்தன்"
(அ) 'கண் இலா அருளிலி' எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(ஆ) அவர் 'அருளிலி' எனச் சுட்டப்படுவதற்கான காரணம் யாது?

(vii) "மீசைக்கு விதை நட்டுவி இளமை மழை பெய்ய
பயிர் முளைத்த பருவம்"
(அ) 'இளமை மழை' எனக் குறிப்பிடப்படுவது எது?
(ஆ) 'பயிர் முளைத்தல்' என்பது எதனைச் சுட்டுகிறது?

(viii) "மண்ண நம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா
மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா
கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா
இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவ நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா"
(அ) இந்தப் பாடலைப் பாடும் தொழிலாளர் யாவர்?
(ஆ) இந்தப் பாடல் வரிகளினூடாகக் கவிஞர் எதனைப் புலப்படுத்த விரும்புகிறார்?

(ix) "இந்த பைல் இஞ்ச எப்பிடி வந்தது?"
(அ) 'பைல்' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம் யாது?
(ஆ) 'இஞ்ச எப்பிடி' என்ற பேச்சு வழக்குத் தொடரின் எழுத்து வடிவத்தை எழுதுக.

(x) "தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடு போல் தாவித்தாவிப்
பல பொருள் நாடுவோர்"
(அ) இங்கு ஆட்டின் செய்கை யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?
(ஆ) முயற்சியற்றவர் இயல்புகள் இரண்டினைத் தருக.
வினா 7 (கட்டாயம்). Paper III · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த11·அ9
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(a) ஏர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர் தட்டினும் தட்டுவாராமலே அன்னதானத்துக்
மார் தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயா
(அ) இங்கு சீதக்காதியின் கொடைச் சிறப்பு எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
(ஆ) பஞ்சம் நிலவும் காலத்து அவரது கொடையை கவிஞர் விவரிக்குமாற்றை விளக்குக.

(b) ஓடுகின்ற நீரையெதிரத்து தோள்கள்
ஊருகின்ற சிற்றெறும்பு முங்குமுறை வாழ்க்கை
ஆடுகின்ற பூமரங்கள் அன்றிய இலைகள்
அதிகாலை இரை தேடவரும் பறவை
மூடுகின்ற இமைக்கு முழுநிலவு விழிகள்
முந்தா லைகட்டும் செந்தாழம் பூக்கள்
கூடுகின்ற கழியில் குதூகலத்தைத் தருமே
என எனது மனம் குதித்தாடும் தினமே
(அ) கவிஞர் உள்ளமானது குழந்தை போலக் குதூகலிப்பதற்கான காரணங்களை விளக்குக.
(ஆ) இயற்கையினூடாக நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை எவை?

(c) யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்
(அ) நல்ல நண்பர்க்கு உவமையாக நாய் குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருத்தப்பாட்டை விளக்குக.
(ஆ) யானை அனையவர் நட்பை நீக்க வேண்டும் என கவிஞர் ஏன் கருதுகிறார்?

(d) "கீழ்த்திசை நாடுகட்குச் செல்ல வேண்டிய மேற்றிசைப் பண்டம், தமிழ்நாட்டில் இறக்கப்பெற்று வேறு மரக்கலங்களில் கீழ்த்திசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. எனவே இத்தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொயிக் வாதிகள் உரோமப் பேரரசு காலத்தில் எவ்வாறு ஓர் உலக மனப்பான்மையை வளர்த்தார்களோ, அவ்வாறே சங்க காலத்திற்கு முற்பட்ட காலம் தொடங்கி ஒர் உலக மனப்பான்மை தமிழ்நாட்டில் பரவியுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் கூறுவதற்கு இம்மனப்பான்மை ஊக்கமளித்தது."
(அ) தமிழரின் உலக மனப்பான்மை எவ்வாறு வளர்ந்தது எனக் கட்டுரையாசிரியர் எடுத்துரைக்கிறார்?
(ஆ) 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் கூற்றினூடாக உலக மனப்பான்மை வெளிப்படுமாற்றை விவரிக்குக.

(e) "நானும் மூத்தம்மாவைப் போல் சுயமாய் ஓர் இளவரசனாய் இயங்க ஆவல் கொண்டேன். மனோ தைரியம் அவளுக்கு. நானும் அப்படி நடந்து பார்த்தேன். இரத்தம் மரத்துவிடவில்லை. பயம் என்னைப் பீடிக்கவில்லை. மஞ்சோனா மரத்தின் கீழ் தனிமையாகப் பழகினேன். மேகத்தைப் பார்த்து கரும்பூதமாய் உள்ளுக்குள் ஓடத்தோன்றும். மூத்திரம் முடுத்தால் மூத்தம்மாவை எழுப்பிக் கொண்டு சிணுங்குவதில்லை. இந்த ராஜ்யத்தின் அரசியைப் போல், நானுமொரு இளவரசனானேன்."
(அ) மூத்தம்மாவின் ஆளுமைப் பண்புகளாக இங்கு குறிப்பிடப்படுபவை யாவை?
(ஆ) 'இந்த ராஜ்யத்தின் அரசியைப் போல், நானுமொரு இளவரசனானேன்' என்பதன் மூலம் கதாசிரியர் எதை உணர்த்த விழைகிறார்?
வினா 8 (கட்டாயம்). Paper III · "நாவலர் எழுந்தார்" அல்லது "கம்பியூட்டர்" (15 புள்ளிகள்) த11·அ9
3. 'நாவலர் எழுந்தார்' என்ற கட்டுரையில்,
(அ) நாவலரின் ஆளுமையும் நேர்மையும்
(ஆ) பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் சித்திரிப்புத் திறனும்
புலப்படுமாற்றை விளக்குக.

அல்லது

'கம்பியூட்டர்' என்ற சிறுகதையில்,
(அ) எழுத்தாளரது குடும்பத்தையும் கம்பியூட்டர் அன்னியோன்னியமாக்கிய விதத்தையும்
(ஆ) அதை சுவையுடன் சித்திரிக்குமாற்றையும்
விளக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper III · "பேதைமை" அதிகாரம் அல்லது குகப்படலம் (15 புள்ளிகள்) த11·அ9
4. 'பேதைமை' என்ற அதிகாரத்தில்,
(அ) பேதைமை உடையோரின் செயல்கள்
(ஆ) பேதைமை உடையோரைச் சுட்டப் பயன்படும் அணிகள்
என்பனவற்றை விளக்குக.

அல்லது

குகப்படலத்தில்,
(அ) பரதன் கோசலையை குகனுக்கு அறிமுகம் செய்தல்
(ஆ) கோசலை கூறிய வாழ்த்துரை
ஆகியவற்றினூடாகக் கம்பனின் கவியாற்றல் புலப்படுமாற்றை விவரிக்குக.
வினா 10. Paper III · "இனி நினைந்திரக்க மாகின்று" — புறநானூறு (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
5. 'இனி நினைந்திரக்க மாகின்று...' என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில்,
(அ) இளமைக்காலத்து உணர்வுகளும்
(ஆ) முதுமைக்காலத்து உணர்வுகளும்
சித்திரிக்கப்படுமாற்றினை விவரிக்குக.
வினா 11. Paper III · "எது நல்ல சினிமா" கட்டுரை (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ9
6. 'எது நல்ல சினிமா' என்ற கட்டுரையில்,
(அ) காட்சிப் படிமங்கள்
(ஆ) ஒலி
(இ) படத்தொகுப்பு
ஆகியவற்றினூடாக சினிமா உருவாகுமாற்றை கட்டுரையாசிரியர் எவ்வாறு காட்டுகின்றார்?
வினா 12. Paper III · "ஆசைக்கிளியே" நாட்டார் பாடல் (Q5/6/7, 10 புள்ளிகள்) த11·அ6
7. 'ஆசைக்கிளியே...' என்று தொடங்கும் நாட்டார் பாடலில்,
(அ) காதலி பற்றிய வருணனை
(ஆ) காதலனின் மன உறுதி
ஆகியன வெளிப்படுமாற்றை விளக்குக.

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. 'பண்டே பழகியிருந்தாலும் அறியார் **புல்லர்**.' — இங்கு **புல்லர்** என்பது:
    1. சிறியவர்
    2. அறிவிலார்
    3. பெரியவர்
    4. நல்லோர்
  2. 'புலங்களோடு **கரணமும்** ஆவியும் போந்து நின்ற...' — இங்கு **கரணம்** என்பது:
    1. மனம்
    2. உடல்
    3. உயிர்
    4. முகம்
  3. 'இன் துணைவன் இராகவனுக்கும் எனக்கும் **மூத்தான்**.' — இங்கு **மூத்தான்** என்பதன் எதிர்க்கருத்துள்ள சொல்:
    1. நண்பன்
    2. தம்பி
    3. இளையான்
    4. மைத்துனன்
  4. **கலக்கம்** என்ற சொல்லுக்கான எதிர்க்கருத்துச் சொல்:
    1. துன்பம்
    2. தெளிவு
    3. குழப்பம்
    4. மயக்கம்
  5. 'நெருங்கக் காண்பது **கன்னலிற்** செந்நெல்.' — இங்கு **கன்னல்** என்று சுட்டப்பெறுவது:
    1. நெல்
    2. புல்
    3. வாழை
    4. கரும்பு
  6. 'வால் வண்டியில் இருப்பது எனக்கு நல்ல **குஷி**.' — இங்கு **குஷி** என்ற சொல் தரும் பொருள்:
    1. பயம்
    2. ஆவல்
    3. மகிழ்ச்சி
    4. விருப்பம்
  7. '**சுப்பர் மார்க்கட்**' (super market) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்:
    1. சிறப்பங்காடி
    2. நாளங்காடி
    3. அல்லங்காடி
    4. அங்காடி
  8. **பொருத்தமற்ற** சொற்களின் இணைப்பு:
    1. சோலை, தோப்பு
    2. வாள், வேல்
    3. பாடசாலை, பட்டப்படிப்பு
    4. நண்பன், தோழன்
  9. அரச சபையில் அரசனுக்கு **ஆலோசனை** வழங்குபவர்:
    1. கட்டியக்காரர்
    2. அமைச்சர்
    3. விகடகவி
    4. புலவர்
  10. தென்னையின் இளையது 'பிள்ளை' என்பது போல **பனையின்** இளையது:
    1. வடலி
    2. நாற்று
    3. குட்டி
    4. முளை
  11. '**அள்ளி இறைத்தல்**' எனும் மரபுத்தொடரின் கருத்து:
    1. அதிகமாக இறைத்தல்
    2. ஊதாரிச் செலவு
    3. வள்ளண்மை
    4. மிகைச் செலவு
  12. எவ்வளவு உழைத்தாலும் பணத்தைச் சேமிக்காதவனைக் குறிக்கும் **மரபுத்தொடர்**:
    1. ஓட்டைக் கையன்
    2. விசிறு கையன்
    3. மழைக் கையன்
    4. கொடைக் கையன்
  13. '**பால் நிலவு**' என்பது:
    1. இணைமொழி
    2. அடுக்குத்தொடர்
    3. தொகைநிலைத் தொடர்
    4. மரபுத்தொடர்
  14. பொதுக் கூட்டம் ஒன்றில் **தவிசாளர்** உரை நிகழ்த்தினார் — இங்கு '**தவிசாளர்**' எனக் குறிக்கப்படுபவர்:
    1. காப்பாளர்
    2. தலைவர்
    3. செயலாளர்
    4. பொருளாளர்
  15. உலோபியினுடைய பொருள் பிறரால் களவாடப்படும் எனும் பொருள் தரும் **பழமொழி**:
    1. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
    2. அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடாதே
    3. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்
    4. எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்
  16. '**புத்திமான் பலவான்**' எனும் பழமொழியின் கருத்து:
    1. பலசாலியாக இருப்பவன்தான் புத்திசாலியாக இருப்பான்
    2. புத்திசாலியான ஒருவன் பல ஆண்களுக்கு நிகராவான்
    3. புத்திசாலிக்குப் பலம் மிகவும் அவசியமானது
    4. புத்திசாலியாக இருப்பவனே உண்மையான பலசாலியாவான்
  17. பெற்றோர் தம் மகனை '**கண்ணுக்குக் கண்ணாக**' வளர்த்தனர் — இந்த அருஞ்சொற்றொடரால் உணர்த்தப்படுவது:
    1. நெருக்கமாக இருத்தல்
    2. கவன ஈர்த்தல்
    3. உறக்கமின்றி வளர்த்தல்
    4. கண்ணால் நோக்குதல்
  18. (அ) சுற்றுச் சூழல் நன்றாகப் பேணப்படுகின்றது. (ஆ) நுளம்பின் பெருக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. — இவ்விரு வாக்கியங்களை இணைக்க மிகப் பொருத்தமான **இணைப்பிடைச் சொல்**:
    1. எனவே
    2. எனினும்
    3. அத்துடன்
    4. ஆனால்
  19. 'கையும் மெய்யுமாகப் பிடிபட்ட **திருதிரு** என விழித்தான்.' — இங்கு **திருதிரு** என்பது:
    1. அடுக்குத்தொடர்
    2. இணைமொழி
    3. இரட்டைக்கிளவி
    4. அடுக்கிடுக்குத்தொடர்
  20. வீட்டின் படுக்கையறையில் **பீரோ** உள்ளது. — இங்கு **பீரோ** என்பது:
    1. ஒல்லாந்து மொழிச்சொல்
    2. பிரான்சிய மொழிச்சொல்
    3. ஆங்கிலச்சொல்
    4. போர்த்துக்கேய மொழிச்சொல்
  21. '**கணினிக் கண்**' என்பது:
    1. பொருள்வழு
    2. காலவழு
    3. திணைவழு
    4. மரபுவழு
  22. 'கண்ணன் அலுவலகத்தில் இருந்தான்; அவனைத் தேடி அப்பா வந்தார்.' — இவ்வாக்கியத்தில் **எழுவாய்** எது?
    1. கண்ணன்
    2. அலுவலகம்
    3. அப்பா
    4. அவன்
  23. 'பேச்சுப் போட்டியில் குமரன் முதலாம் **பரிசு** பெற்றான்.' — இங்கு **பரிசு** என்பது:
    1. எழுவாய்
    2. பயனிலை
    3. செயப்படுபொருள்
    4. அடைமொழி
  24. '**சிறு + குடை**' என்பதைப் புணர்த்தி எழுதினால் வருவது:
    1. சிறுகுடை
    2. சிறுக்குடை
    3. சின்னக்குடை
    4. சிற்குடை
  25. 'இந்தியா விண்வெளியில் **ஏவுகணையை**ச் செலுத்தியது.' — இங்கு **ஏவுகணை** என்பது:
    1. பண்புத்தொகை
    2. உவமைத்தொகை
    3. வினைத்தொகை
    4. வேற்றுமைத்தொகை
  26. 'அவள் மிக அழகான பொம்மை ஒன்றை வாங்கினாள்.' — இங்கு '**மிக அழகான**' என்பது:
    1. பெயரெச்சத்தொடர்
    2. வினையடைத்தொடர்
    3. பெயர்த்தொடர்
    4. பெயரடைத்தொடர்
  27. பின்வருவனவற்றுள் **பின்னொட்டு ஏற்காத** சொல்:
    1. அநீதி
    2. நோயாளி
    3. புதுமை
    4. அரசியல்
  28. 'மழைக் காலமாதலால் வாய்க்காலில் நீர் நிறைந்திருந்தது.' — இங்கு **வாய்க்கால்** என்பது:
    1. இலக்கணமுடையது
    2. இலக்கணப்போலி
    3. எழுத்துப்போலி
    4. மரபுவழு
  29. **பொருத்தமற்ற உதாரணம்** இடம்பெற்றுள்ள சொற்றொகுதி:
    1. பெயர்ச்சொல்: கதிரை, மார்கழி, செம்மை
    2. இடகுறிப்பெயர்: மரம், மலை, மண்
    3. வினைச்சொல்: படி, அலை, நடை
    4. உரிச்சொல்: சால, உறு, நனி
  30. **பொருத்தமற்ற உதாரணம்** இடம்பெற்றுள்ள சொற்றொகுதி:
    1. கூட்டுப்பெயர்: மின்சாரறிலையம், எழுதுகோல், பறிமுதல்
    2. ஆக்கப்பெயர்: முதலாளி, கணையாழி, விடுகாலி
    3. தொழிற்பெயர்: காணுதல், நடத்தல், கூவுதல்
    4. வினையாலணையும்பெயர்: வந்தவன், போனவன், பேசினவன்
  31. நீதிபதி வழக்கு விசாரணையை மறுதிகதிக்கு ____________ வைத்தார்:
    1. தாமதித்து
    2. நிறுத்தி
    3. முடக்கி
    4. ஒத்தி
  32. இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் ____________ விகிதத்தை அறிவித்துள்ளது:
    1. செலாவணி
    2. வட்டி
    3. தேவைப்பாடு
    4. நாணயமாற்று
  33. வெளிநாட்டிலிருந்து அதிக பொருட்களைக் கொண்டு வந்த பயணிக்கு சுங்க அதிகாரிகள் ____________ விதித்தனர்:
    1. குற்றம்
    2. தண்டனை
    3. தீவை
    4. கட்டணம்
  34. தேர்தல் வாக்களிக்கும் நடைமுறைகளை ____________ பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் சேர்ந்தனர்:
    1. பங்கெடுக்க
    2. பயிற்சியளிக்க
    3. பாதுகாக்க
    4. கண்காணிக்க
  35. பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்குப் பிள்ளைகளை அனுமதிப்பது தொடர்பான புதிய ____________ அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டது:
    1. சுற்றறிக்கை
    2. அறிக்கை
    3. வர்த்தமானி
    4. சட்டமூலம்
  36. களியாட்ட விழாவைக் காண நண்பர்கள் கூட்டம் மைதானத்திற்குச் ____________:
    1. சென்றனர்
    2. சென்றது
    3. சென்றார்கள்
    4. சென்றன
  37. தேடிச் சோறு நிதம் தின்று... வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? — இக்கவிதை உணர்த்தும் அடிப்படையான பொருள்:
    1. தற்பெருமை
    2. தன்னலம்
    3. தன்சரிதை
    4. தன்னம்பிக்கை
  38. இக்கவிதையில் '**கூற்றுக்கு இரை**' என்ற தொடர் குறிப்பது:
    1. உணவு
    2. மரணம்
    3. ஜனனம்
    4. யமன்
  39. இக்கவிதையில் '**சின்னஞ்சிறு கதைகள்**' என குறிப்பிடப்படுவது:
    1. மிகச்சிறிய கதைகள்
    2. சிறுகதைகள்
    3. பயனற்ற கதைகள்
    4. கேலிக்கதைகள்
  40. கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன — சரியான வைப்பு முறை:
    அ — ஆயினும் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் அவர் குறிக்கவில்லை.
    ஆ — இது போலவே அவர் காலத்தைக் கடந்த பொதுக்கருத்துக்களையே கூறினார்.
    இ — திருவள்ளுவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்.
    ஈ — அதனால்தான் திருக்குறள் உலகப்பொது நூலாக விளங்குகிறது.
    உ — இவ்வாறு இடத்தையும் சூழ்நிலையையும் கடந்து நிலவும் பொதுக்கருத்துக்களை திருக்குறளில் காணலாம்.
    1. ஆ, ஈ, இ, உ, அ
    2. அ, ஆ, இ, ஈ, உ
    3. இ, அ, ஆ, உ, ஈ
    4. இ, ஆ, உ, ஈ, அ

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

← அனைத்து வினாத்தாள்களும்