📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2021

📄 சா/த தமிழ் — 2021 (2022)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper II · இலக்கண வினாக்கள் — 9 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(i) பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக. [மூல தாளில் காண்க — OCR தெளிவின்மை]

(ii) "கண்ணான மச்சி வந்தென் காலூன்றக் கண்டேனே" — இதன் எழுவாயைக் குறிப்பிடுக.

(iii) பின்வரும் பேச்சுவழக்குத் தொடரை எழுத்து வழக்கில் தருக:
"இந்தப் புத்தகம் இஞ்ச எப்பிடி வந்தது?"

(iv) பின்வரும் வாக்கியத்தைப் பொருத்தமான நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக:
"நான் படித்து முடித்துவிட்டேன் என்று சிறுவன் கூறினான்"

(v) "ஆய்வாளர்கள் பலர் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்." — இதனை எதிர்மறை வாக்கியமாக்குக.

(vi) 'பணி' என்பது பெயராகவும் வினையாகவும் வரத்தக்க வகையில் ஒவ்வொரு வாக்கியம் எழுதுக.

(vii) 'குடலை காயும் வரை | எனது கிராமத்தின் |' — இக்கவிதையில் இடம்பெற்றுள்ள நெற்கதிரின் இளமையைக் குறிக்கும் மரபுச்சொல் யாது?

(viii) பின்வரும் சொற்றொகுதியுள் இரு சொற்கள் ஒத்த பொருளுடையன. அவற்றை இனங்கண்டு குறிப்பிடுக:
தனியுரிமை, சுகபோகம், விதப்புரை, விமோசனம், ஏகபோகம்

(ix) "ஆபிரிக்காவில் இந்திய யானைகளைவிடப் பெரிய யானைகள் இருக்கின்றன."
"தோற்றத்திலும் குணத்திலும் இந்திய யானைகளே சிறந்தவை."
மேற்படி இரு வாக்கியங்களையும் இதே ஒழுங்கில், பொருத்தமான இணைப்பிடைச்சொல் கொண்டு இணைக்குக.

(x) பின்வரும் வாக்கியத்தை வழுவற்ற வகையில் திருத்தி எழுதுக. [மூல தாளில் காண்க — OCR தெளிவின்மை]
வினா 2. Paper II · கட்டுரை / நேர்காணல் / மேடைப்பேச்சு / சிறுகதை — ஒன்றை தேர்க (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தேர்வுசெய்து ~250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் தாராளமாக உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பது உண்மையே; அதற்காக விளைச்சலைப் பெருக்கும் செயற்கைப் பசளைகளைப் பயன்படுத்துவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகையால் இயற்கைப் பசளைகளை உபயோகிப்பதே ஆரோக்கியமானதாகும். — இது தொடர்பான ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) சுற்றுச்சூழலைப் பேணுவதில் ஆர்வமுடைய ஒருவரைச் சந்தித்து, சுற்றுச்சூழலுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றை நீக்குவதற்கான வழிவகைகள், அவை தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் முதலானவை குறித்து நீர் கண்ட நேர்காணல்.

(iii) போரால் ஆதிக்கத்தை நிலைநிறுத்தலாம் என்று நாடுகள் பலவும் எண்ணுகின்றன. எனினும் போரினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. போரில் ஈடுபடும் நாடுகள் மட்டுமன்றி முழு உலகுமே பாதிப்புக்கு உள்ளாகின்றது. உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்படுகிறது. ஆகையால் எவ்வகையிலேனும் போர் தவிர்க்கப்பட வேண்டும். — இதனை வலியுறுத்தும் ஒரு மேடைப்பேச்சு.

(iv) சுந்தரன் தன் வாழ்க்கையைப் பற்றிய ஆயிரம் கனவுகளுடனே வாழ்ந்தான். அவற்றை நனவாக்கிட அல்லும் பகலும் அயராது பாடுபட்டான். அக்கனவுகள் மெய்ப்படும் தருணத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட வீதி விபத்தொன்று அவன் வாழ்க்கையைத் தலைகீழாக்கிவிடுகிறது. வாகனமோட்டுதலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தும் ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper II · பொதுமைச் சிந்தனை உரைப்பகுதி சுருக்கம் — 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
பின்வரும் உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் எழுதுக (எண்ணிக்கை குறிப்பிடுக):

"பொதுமைச் சிந்தனைகள் உலகப் பொதுவானவை. பெரும்பாலும் எல்லா மொழி இலக்கியங்களிலும் இப்பொதுமையை வலியுறுத்தியுள்ளனர். எல்லோரும் இன்பமாக வாழவேண்டும் எனும் உயரிய நோக்கமே இப்பொதுமைச் சிந்தனைகளின் அடிப்படையாகும். கிறிஸ்துவுக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டிலே வாழ்ந்த பிளேட்டோவிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் பதினாறாம் நூற்றாண்டிலே வாழ்ந்த தாமஸ் மூர், இருபதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த பெர்னாட் ஷா வரை எத்தனையோ பேர் தமக்குப் பிடித்த சமுதாயங்களைச் சித்திரித்துள்ளனர். கம்பரின் அயோத்தியும் காந்தியடிகளின் ராமராஜ்ஜியமும் அத்தகையவையே. இவையெல்லாம் கற்பனையில் கண்ட உலகுகள் — மிகச்சிறந்த இலட்சியங்களாக இருந்தன; படிப்போருக்கு மானசீகமான இன்பத்தைக் கொடுத்தன."
வினா 4 (கட்டாயம்). Paper II · மரபுத்தொடர் — உரைப்பகுதி வினாக்கள் (10 புள்ளிகள்) த10·அ3
4. பின்வரும் உரைப்பகுதியை வாசித்து அதன்கீழ்த் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக:

"மொழிப்பயன்பாட்டில் உணர்வு வெளிப்பாட்டுக்கு மிக முக்கிய இடம் உண்டு. நேரடிப் பொருள்தரும் சொல் பயன்பாடுகளைக் காட்டிலும் மறைமுகமான, குறிப்பான பொருள்தரும் சொல், தொடர்ப் பயன்பாடுகள் உணர்வு வெளிப்பாட்டிற்குப் பெரிதும் உதவுகின்றன. இவ்வகை உணர்வு வெளிப்பாட்டுக்குப் பயன்படும் மொழிக் கூறுகளில் மரபுத்தொடரும் ஒன்று. மரபுத்தொடர்கள் கவிதைமொழி போன்றவை. 'அவன் எல்லோரையும் ஏமாற்றிவிட்டான்' என்பது இயல்பான வாக்கியம். 'அவன் எல்லோர் தலையிலும் மிளகாய் அரைத்துவிட்டான்' என்பது மரபுத்தொடர் வாக்கியம். இவ்விரண்டும் தரும் பொருள் ஒன்றுதான் என்றாலும் மரபுத்தொடர் கருத்தை ஆற்றலுடன், முழுவீச்சுடன் வெளிப்படுத்துகின்றது. 'கால்கட்டுப்போடு', 'தார்க்குச்சி போடு' எனும் இரு தொடர்களும் முறையே நேர்ப்பொருளில் கால்நடைகளை கட்டுவதையும் மாடுகளை ஓட்டுவதையும் குறித்தாலும், காலப்போக்கில் திருமணம் செய்தல், ஒருவரை வேலைக்கு தூண்டிவிடுதல் எனும் குறிப்புப் பொருள்களையும் பெற்றுள்ளன. ஆக மரபுத்தொடர்கள் கூட்டுச் சொற்களின் இயல்பான பொருளைத் தராமல் குறிப்பான வேறு பொருளைத் தருவனவே."

(i) மரபுத்தொடர் பற்றி இங்கு கூறப்பட்ட வரைவிலக்கணம் யாது?
(ii) 'கால் கட்டுப் போடு' என்ற தொடர் சுட்டும் குறிப்புப் பொருள் யாது?
(iii) உணர்வு வெளிப்பாட்டுக்கு மிகவும் வாய்ப்பான மொழிப் பயன்பாடு எத்தகையது?
(iv) மரபுத்தொடர்கள் மொழியின் சொற்றொகுதியில் முக்கிய இடம் பெறுவதற்கான காரணம் யாது?
(v) 'தார்க்குச்சி போடு' என்ற தொடரின் நேர்ப்பொருள் யாது?
வினா 5. Paper II · கடிதம் அல்லது துண்டுப்பிரசுரம் (15 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்க:

(i) தமிழின் மிக மூத்த படைப்பாளியான கவிஞர் அகரமுதல்வன் நாடறிந்த பிரபல கவிஞராவார். முல்லையூர் மத்திய மகா வித்தியாலய தமிழ்ச்சங்கச் செயலாளராகிய த. பூங்குழலி என்று உம்மைக் கருதிக்கொண்டு, அச்சங்கம் நடாத்தவுள்ள தாய்மொழித்தின விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி வேண்டி கவிஞர் அகரமுதல்வனுக்கு பின்வரும் விடயங்களை உள்ளடக்கிக் கடிதம் ஒன்று எழுதுக:
• தாய்மொழித்தின விழாவின் அவசியம்
• விழா குறித்த தரவுகள்
• பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வதற்கான அழைப்பு

(ii) இன்றைய மனித வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாதது. மின்சாரத்தின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கோரி பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியதாக, பொன்னகர் நவோதய மக்கள்நலச் சங்கத்தின் சார்பில் 100 சொற்களில் ஒரு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் எழுதுக:
• மின்சாரத்தின் இன்றியமையாமை
• மின்சார உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள சவால்
• சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள்
வினா 6 (கட்டாயம்). Paper III · சுருக்கமான விடை — இலக்கியம் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை தருக:

(i) 'வண்டோ கானத்திடையிருந்து வந்து கமல மதுவுண்ணும்'
(அ) 'கானத்திடை' என்பதைப் பிரித்து எழுதுக.
(ஆ) 'கமல மது' என்பது எதனைக் குறிக்கிறது?

(ii) 'வாதப்பிரதிவாத மின்னல்கள் முழக்கங்கள் நடக்கின்றன.'
(அ) 'பிரதிவாதம்' என்றால் என்ன?
(ஆ) இதில் இடம்பெற்ற அணி யாது?

(iii) 'வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப்பிறைக்கும் விழிவேலே.'
(அ) 'கரும்பிறை' என்பது யாரைக் குறிக்கிறது?
(ஆ) அவர் அவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் யாது?

(iv) 'கம்பியூட்டருடன் அவர்களது பொழுது முக்காலமும் கழிந்தது. புது கேம்ஸ்களை பண்டமாற்றுச் செய்து பாவித்தார்கள்.'
(அ) 'முக்காலமும் கழிந்தது' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?
(ஆ) 'பண்டமாற்று' என்றால் என்ன?

(v) 'முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்'
(அ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டு யாது?
(ஆ) 'முழங்கு திரைப் புனலருவி' என்ற தொடரினை விளக்குக.

(vi) 'சினந்தரிவி வெட்டும் இளந்தாரிமாரை கண்ணூறு படாமற் காரும் ஐயனாரே'
(அ) இங்கு 'இளந்தாரிமார்' எனச் சுட்டப்படுவோர் யாவர்?
(ஆ) 'காரும்' என்ற சொல்லின் பொருளைத் தருக.

(vii) 'நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.'
(அ) 'யாதொன்றும் பேணாமை' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?
(ஆ) 'நாரின்மை' என்பதனை விளக்குக.

(viii) 'அப்ப ஏன்கா நம்மட உம்மா மவுத்தாப் போன அண்டைக்கு இது கத்தல்ல.'
(அ) இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது?
(ஆ) 'அண்டைக்கு இது கத்தல்ல' என்பதனை எழுத்துத் தமிழில் திருத்தமாக எழுதுக.

(ix) 'புழுதிப் படுக்கையில் புதைந்த எம் மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை'
(அ) இங்கு 'படுக்கை' என்பது எதனைக் குறிக்கிறது?
(ஆ) 'இரங்கற் புகழ்மொழி' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

(x) 'பறம்பு மலையில் பால் வார்க்கும் நிலவை... சங்கவை, எப்படி எடுத்துச் செல்வது'
(அ) இக்கூற்றில் வெளிப்படும் உணர்ச்சி யாது?
(ஆ) 'பால்வார்க்கும் நிலவு' என்ற தொடரில் காணப்படும் நயம் யாது?
வினா 7 (கட்டாயம்). Paper III · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த10·அ4
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(a) கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே
எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்றல் இனிது.
(அ) இப்பாடலில் 'இனிது' எனக் கூறப்படுவனவற்றை உமது சொந்த மொழிநடையில் எழுதுக.
(ஆ) 'எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்' — இத்தொடரில் குறிப்பிடப்படும் ஈகையின் சிறப்பியல்பு யாது?

(b) நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பன மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
யேங்கக் காண்பது மங்கல பேரி
யீச ராரிய நாடெங்கள் நாடே.
(அ) குற்றாலமலையின் இயற்கை வளம் எடுத்துரைக்கப்படுமாற்றை விளக்குக.
(ஆ) 'நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

(c) தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்துஇன் புறாஉம் இளையோர் போல
உற்றுஇன் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்துஇன் புற்றெனம் செறிந்த வளையே.
(அ) தலைவியின் காதல் உணர்வு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
(ஆ) இங்கு கையாளப்பட்டுள்ள அணியை இனங்கண்டு விளக்குக.

(d) "உருக்கி எடுத்த இரும்பினால் செய்த 'ரெமிங்டன்' தட்டெழுத்துப் பொறியில் நான் ஆரம்பகாலத் தீட்சை பெற்றவன். அதைத் தூக்க இரண்டு பேரும் வைக்க நாலு பேரும் வேணும். நகல் எடுக்கும் மெசின்கள் வருவதற்கு முன்னரான ஒரு காலம் அது. ஏழு கார்பன் தாள் வைத்து, கைகளை நல்ல உயரத்துக்குத் தூக்கி, மூச்சைப் பிடித்து 'தேடிக் குத்தி' டைப் செய்வதில் நான் ஒரு விண்ணன் என்று பேர் வாங்கியவன்."
(அ) 'ரெமிங்டன்' பொறியில் தட்டச்சுச் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய கடும் பிரயத்தனம் இங்கு எவ்வாறு விவரிக்கப்படுகின்றது?
(ஆ) அப்பொறியில் தட்டச்சுச் செய்வதில் தனக்குள்ள பரிச்சயத்தை கதைசொல்லி எவ்வாறு வெளிப்படுத்துகின்றார்?

(e) "தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை இயற்கைப் புலமையும் அறிவுத் தெளிவுமுள்ள உண்மைக் கவிஞர்கள் காவியங்களிலே சூக்கும வடிவில் அமைத்துக் காட்டுகின்றார்கள். இவ்வற்புதக் காட்சியில் இலக்கிய புருடர்களைக் காணாமற் கண்டு பேரானந்தம் அடைகின்றோம்."
(அ) உண்மைக் கவிஞர்களது கவியாற்றல் எத்தகையது?
(ஆ) இங்கு 'காணாமற்கண்டு' என்ற தொடர் கையாளப்பட்டுள்ளதன் பொருத்தப்பாடு யாது?
வினா 8 (கட்டாயம்). Paper III · கிருட்டிணன் தூதுச் சருக்கம் அல்லது பாரதியார் (15 புள்ளிகள்) த11·அ9
3. கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில்,
(அ) சமாதானத்தை வலியுறுத்தி தர்மனும்
(ஆ) போரை வலியுறுத்தி வீமனும்
முன்வைத்த கருத்துக்களைத் தெளிவுறுத்துக.

அல்லது

(அ) தன் காதலியைக் காண்பதில் பாரதி காட்டிய தீவிரம்
(ஆ) விரும்பியதை அடைவதற்குத் தீவிர ஈடுபாட்டின் அத்தியாவசியம்
என்பன வெளிப்படுத்தப்பட்டிருக்குமாற்றை விளக்குக.
வினா 9 (கட்டாயம்). Paper III · "நாவலர் எழுந்தார்" அல்லது "மூத்தம்மா" (15 புள்ளிகள்) த11·அ8
4. "நாவலர் எழுந்தார்" என்ற கட்டுரையில்,
(அ) வாதமகாசபையினதும் அங்கு இடம்பெற்ற வாதங்களினதும் சிறப்பு
(ஆ) கடும் நோய்க்கு மத்தியிலும் நியாயத்தின்பால் நாவலர் காட்டிய சிரத்தை
என்பன விவரிக்கப்பட்டிருக்குமாற்றை விளக்குக.

அல்லது

"மூத்தம்மா" என்ற சிறுகதையில்,
(அ) கிராமிய வாழ்வியல்
(ஆ) ஆசிரியரின் வர்ணனைத்திறன்
என்பன வெளிப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக.
வினா 10. Paper III · "வெற்றி வேற்கை" (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ3
5. 'வெற்றி வேற்கை'யில்
(அ) பெரியோரெல்லாம் பெரியர் அல்லர்
(ஆ) சிறியோரெல்லாம் சிறியர் அல்லர்
என்ற உண்மைகள் உணர்த்தப்படுமாற்றைத் தெளிவுறுத்துக.
வினா 11. Paper III · "தனிப் பாடல்கள்" (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ3
6. 'தனிப் பாடல்கள்' பகுதியில்,
(அ) 'ஓர் தட்டிலே...' எனத் தொடங்கும் பாடலில் சீதக்காதியின் கொடைத்திறமும்
(ஆ) 'கழியும் பிழை...' எனத் தொடங்கும் பாடலில் காளமேகப் புலவரின் கவிச்செருக்கும்
வெளிப்படுமாற்றைத் தெளிவுறுத்துக.
வினா 12. Paper III · "தமிழர் பண்பாடு" (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ3
7. "தமிழர் பண்பாடு" என்ற கட்டுரையில் பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய,
(அ) உலக மனப்பான்மை
(ஆ) மக்கள் நலக் கொள்கை
ஆகியன எடுத்துரைக்கப்படுமாற்றினை விளக்குக.

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. '... பள்ளி ...' — இங்கு பள்ளி என்பது: (OCR: கவிதை வரி தெளிவாகக் கிடைக்கவில்லை)
    1. வழிபாட்டுத்தலம்
    2. படுக்கை
    3. பாடசாலை
    4. மண்டபம்
  2. 'தாது ஊதி அளி முரலும்' — இங்கு அளி என்பது:
    1. வண்டு
    2. இரக்கம்
    3. தேன்
    4. கொடை
  3. 'நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை' — கேண்மை என்பதன் எதிர்க்கருத்து:
    1. கேளாமை
    2. அண்மை
    3. பகைமை
    4. உரிமை
  4. 'பிணக்கறுக்கும் மூத்தோர்' — பிணக்கம் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்:
    1. பழக்கம்
    2. வழக்கம்
    3. சுணக்கம்
    4. இணக்கம்
  5. 'மாவிலங்கன் பிடி சீவி இறுக்கி' — மாவிலங்கன் என்பது:
    1. பெரிய விலங்கு
    2. ஓர் இடம்
    3. ஒருவகை மரம்
    4. பெரிய துன்பம்
  6. பொருளால் வேறுபட்ட சொற்களைக் கொண்ட தொகுதி:
    1. (OCR கிடைக்கவில்லை)
    2. நங்கை, மங்கை, காரிகை
    3. (OCR கிடைக்கவில்லை)
    4. (OCR கிடைக்கவில்லை)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  7. தொடரப்பட்ட சொற்களின் இணைவு (OCR தெளிவாகக் கிடைக்கவில்லை):
    1. (OCR கிடைக்கவில்லை)
    2. (OCR கிடைக்கவில்லை)
    3. (OCR கிடைக்கவில்லை)
    4. (OCR கிடைக்கவில்லை)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  8. பின்வருவனவற்றுள் பொருளால் வேறுபடும் சொல்:
    1. மெல்லியர்
    2. தையலர்
    3. வனிதையர்
    4. விரகிலர்
  9. 'column' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகத் தமிழில் வழங்கும் கலைச்சொல்:
    1. நெடும்பத்தி
    2. உரைப்பகுதி
    3. பத்தி
    4. வரிசை
  10. 'ஓலை' என்ற சினைப்பெயரோடு தொடர்புபட்டு வழங்காத மரம்:
    1. கமுகு
    2. வேம்பு
    3. தெங்கை
    4. பனை
  11. 'தட்டிக்கொடுத்தல்' என்னும் மரபுத்தொடர் உணர்த்தும் பொருள்:
    1. சுத்தம் செய்தல்
    2. உற்சாகப்படுத்துதல்
    3. ஒதுக்கிவிடுதல்
    4. வாரி வழங்குதல்
  12. 'துஷ்சினாடி' என்ற மங்கல வழக்குச் சொல் உணர்த்தும் பொருள்:
    1. நித்திரை கொண்டார்
    2. கோபித்தார்
    3. மறைந்தார்
    4. அஞ்சினார்
  13. 'சகல தரப்பினரும் வருவர்' என்ற பொருளைத் தரத்தக்க அருஞ்சொற்றொடர்:
    1. தமக்கென வாழாத் தகைமையாளர்
    2. வாழையடி வாழையாக
    3. கருவிலே திருவுடையோர்
    4. ஆண்டி முதல் அரசன் வரை
  14. பின்வருவனவற்றுள் அடுக்கிடுக்குத்தொடர்:
    1. மிகப் பெரிய
    2. பெண்ணம் பெரிய
    3. பெரிய பெரிய
    4. கடலினும் பெரிய
  15. 'தலைவிதியை மாற்ற முடியாது' என்ற பொருள் தரும் பழமொழி:
    1. அடாது செய்தவன் படாது படுவான்
    2. கனிந்த பழம் தானே விழும்
    3. அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
    4. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
  16. (வினா 16 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  17. (வினா 17 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  18. (வினா 18 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  19. (வினா 19 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  20. (வினா 20 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  21. (வினா 21 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  22. (வினா 22 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  23. (வினா 23 — OCR பக்கம் கிடைக்கவில்லை)
    1. (அ)
    2. (ஆ)
    3. (இ)
    4. (ஈ)

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  24. கருவிப்பொருள் வேற்றுமை இடம்பெற்ற தொடர்:
    1. 'ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்துவரும்'
    2. 'வெட்டும் பிடியைச் சிறக்கவே போட்டு'
    3. 'அதன் பிறகு புள்ளுத் தொடர்ந்து வரும்'
    4. 'வெள்ளித் தகட்டினால் விரல் கட்டம் இட்டு'
  25. உடம்படுமெய் பெற்றுப் புணர்ந்த சொல்:
    1. கலைவிழா
    2. கலையரங்கு
    3. கலைச்சொல்
    4. கலாசாரம்
  26. பின்வருவனவற்றுள் பண்புத்தொகை:
    1. வளர்மதி
    2. முகமதி
    3. வெண்மதி
    4. மதிமுகம்
  27. பின்வருவனவற்றுள் ஏவல்வினை:
    1. செய்யுங்கள்
    2. ஒழியட்டும்
    3. வாழ்க
    4. உதவுக
  28. அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி:
    1. அகம், அரவம், வீரம், முகம்
    2. கலம், கண்ணீர், கவிஞன், காலம்
    3. ஆடல், பாடல், புவனம், வாகனம்
    4. குருத்து, பருந்து, விருந்து, மருந்து
  29. பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதி:
    1. தொழிற்பெயர்: ஆட்டம், ஆடுதல், தேட்டம்
    2. பெயரடை: உருக்கமான, உருக்குலைந்து, சின்னஞ்சிறிய
    3. வினையடை: தனித்து, தனியாக, இனிமையாக
    4. வினையெச்சம்: ஓடி, ஓட, விழுந்து
  30. பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதி:
    1. இயல்பு புணர்ச்சி: மதிமுகம், மலரிதழ், மடிமீது
    2. தோன்றல் விகாரப் புணர்ச்சி: பாட்டுப்பெட்டி, இரவுச்செய்திகள், புலிக்குட்டி
    3. திரிதல் விகாரப் புணர்ச்சி: மட்குடம், பழஞ்சோறு, கற்சிலை
    4. கெடுதல் விகாரப் புணர்ச்சி: மரவேர், கனவுலகம், இதழியல்

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

  31. தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பெரும்பாலான கலை நிகழ்ச்சிகளுக்கு பெரும் வர்த்தக நிறுவனங்கள் _________ வழங்குகின்றன.
    1. உதவித்தொகை
    2. அனுசரணை
    3. பணம்
    4. விளம்பரம்
  32. இரசாயன உரத் தட்டுப்பாட்டால் நட்டம் அடைந்த விவசாயிகள் _________ கேட்டுப் போராடுகிறார்கள்.
    1. மானியம்
    2. நிவாரணம்
    3. உதவி
    4. தீர்வை
  33. சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சங்க உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்பட்ட _________ ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
    1. விண்ணப்பம்
    2. தீர்மானம்
    3. மனு
    4. பிரேரணை
  34. நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற _________ நூலின் குறைநிறைகளை காரண காரிய விளக்கங்களோடு எடுத்துரைப்பதாக மிகப் பொருத்தமான வகையில் அமைந்தது.
    1. விமர்சனவுரை
    2. நயப்புரை
    3. கண்டனவுரை
    4. அறிமுகவுரை
  35. பல நூறு ஆண்டுகள் பழைமையான அந்தக் கட்டடம், பெரும் பொருட் செலவில் _________ செய்யப்பட்டது.
    1. நிர்மாணம்
    2. புனர்நிர்மாணம்
    3. அங்குரார்ப்பணம்
    4. ஸ்தாபனம்
  36. தொண்ணூறு வயது ஆகிவிட்ட எனது தாத்தாவால் இப்போதும் வேகமாக நடக்கவும் விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் புத்தகம் வாசிக்கவும் _________.
    1. முடிகின்றது
    2. முடிகின்றன
    3. முடியும்
    4. முடிகிறோம்
  37. இக்கவிதை விவரிக்கும் காட்சி யாது? (தோட்டத்துக் குளிர்ந்த காற்றில் — ஏற்றப்பாட்டு கவிதை)
    1. விவசாயிகள் விடியற்பொழுதில் தோட்டத்துக்கு நீர் இறைப்பது
    2. சூரியோதய வேளையில் தோட்டத்தில் தோன்றும் அழகு
    3. தோட்டத்துக் குளிரில் உழைக்கும் விவசாயிகள் படும் துன்பம்
    4. இருட்டு வேளையில் நீர்பாய்ச்சும் விவசாயிகளின் துயர வாழ்வில் ஏற்பட்ட விடிவு
  38. 'தோட்டத்துக் குளிர்ந்த காற்றில் தொடர்ந்து வந்திருந்த ஏற்றப்பாட்டுத்தான் இதுவரைக்கும் கேட்டது' என்று கூறுவதன் மூலம் உணர்த்தப்படுவது:
    1. வேறு எதையும் பொருட்படுத்த விடாது அமைந்த ஏற்றப்பாட்டின் இனிமை
    2. உருவங்கள் புலப்படாத வகையில் அதுவரை இருள் கவிந்திருந்தமை
    3. உடலை வருத்தும் வகையில் தோட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியமை
    4. தோட்டத்தில் நீர் இறைக்கும்போது விவசாயிகளால் பாடப்படுவது ஏற்றப்பாடு
  39. இப்பாடலில் 'விளக்கு' என உருவகிக்கப்படுவது:
    1. எழுந்த உதய சூரியன்
    2. வெளுத்துவரும் கிழக்கு வானம்
    3. நாட்டுக்காக உழைக்கும் விவசாயிகளின் உயர் பண்பு
    4. விவசாயிகளின் கடின முயற்சி
  40. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை முறைப்படுத்துக (தொல்காப்பியம் — OCR ஒழுங்கு தெளிவாகக் கிடைக்கவில்லை):
    1. ஈ, அ, இ, ஆ, உ
    2. ஈ, அ, உ, ஆ, இ
    3. உ, ஆ, ஈ, அ, இ
    4. உ, ஈ, அ, ஆ, இ

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

← அனைத்து வினாத்தாள்களும்