📚 கற்றல் முதன்மை க.பொ.த. (சா/த) க.பொ.த. (உ/த) பிற 🌐 English உள்நுழைய
முகப்பு · சா/த · தமிழ் · பழைய வினாத்தாள்கள் · 2022

📄 சா/த தமிழ் — 2022 (2023)

விடைகள் பற்றி இவை உண்மையான வினாத்தாள் வினாக்கள். விடைகள் NIE பாடநூலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை — உத்தியோகபூர்வ விடைத்திட்டத்துடன் சரிபார்க்கவும்.

பகுதி II — கட்டமைப்பு வினாக்கள்

வினா 1 (கட்டாயம்). Paper I · இலக்கண வினாக்கள் — 9 உப வினாக்கள் (20 புள்ளிகள்) த10·அ4
(1) "பூட்டித் திறந்தெடுக்கும் பொருள்" — இத்தொடரைப் பிரித்து எழுதுக.
(2) "அக்காலத்து சட்ட நிபுணர்களுள்ளே தலைசிறந்தவர் அவர்" — இவ்வாக்கியத்தின் எழுவாய், பயனிலைகளைக் குறிப்பிடுக.
(3) "ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறாயில்லையாம்." — இப்பேச்சுவழக்குத் தொடரை எழுத்துவழக்கில் தருக.
(4) "உதைபந்தாட்டப் போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்." "மாணவர்களை அதிபர் பாராட்டினார்." — இரண்டு வாக்கியங்களையும் இணைத்து ஒரே வாக்கியமாக எழுதுக.
(5) 'வருந்தினேன்' என்ற தன்வினையின் பிறவினை வடிவம் யாது?
(6) "பருந்துகள் கூட்டம் உயர உயரப் பறந்தன" — இவ்வாக்கியத்தை வழு நீக்கி எழுதுக.
(7) "கூடு" என்ற சொல் பெயராகவும் வினையாகவும் வரத்தக்க வகையில் ஒவ்வொரு வாக்கியம் எழுதுக.
(8) "நீயுமா புரூட்டஸ் என்றான் யூலிய சீசர்" — பொருத்தமான நிறுத்தக்குறிகளுடன் எழுதுக.
(9) "சமுகங்களுக்கு இடையில் முரன்பாடு ஏற்படுவது நல்லதல்ல" — உள்ள எழுத்துவழுக்களை நீக்கி சரியாக எழுதுக.
(10) 'நேர்காணல்' என்ற சொல்லுக்கு நிகராக வழங்கும் வேறு சொல்லைத் தருக.
வினா 2. Paper I · கட்டுரை / மேடைப்பேச்சு / உரையாடல் / சிறுகதை — ஒன்றை தேர்க (25 புள்ளிகள்) த10·அ3
பின்வருவனவற்றுள் ஒன்றைத் தேர்வுசெய்து ~250 சொற்களில் தலையங்கமிட்டு எழுதுக:

(i) உணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. எல்லாத் தரப்பினருக்கும் அது தாராளமாகக் கிடைக்க வேண்டும். உணவு உற்பத்தி பெருகும்போதே அது சாத்தியமாகும். அரசாங்கமும் சமூக அமைப்புகளும் தனிமனிதர் ஒவ்வொருவரும் உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கு உழைப்பது இன்றியமையாத கடமையாகும். இவ்விடயங்களை வலியுறுத்துவதான ஒரு விளக்கக் கட்டுரை.

(ii) இன்று பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நமது நாடு அதிலிருந்து மீள்வதற்கு உள்நாட்டு வருமானத்தைப் பெருக்குவதே சிறந்த வழியாகும். சுற்றுலாத்துறையின் விருத்திக்கு ஏற்ற வழிவகைகளை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரத்தக்க சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். இவ்வாறான விடயங்களை வலியுறுத்தும் ஒரு மேடைப்பேச்சு.

(iii) ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது; பாடசாலைகள் மாணவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களையும் வலியுறுத்த வேண்டும் என்று கருதுபவருக்கும், பெருந்தொகையான மாணவர்கள் காணப்படும் நிலையில் ஒழுக்க விழுமியங்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உரியது என்று கருதுபவருக்கும் இடையிலான உரையாடல்.

(iv) கல்வியை விட செல்வத்தை விட நேர்மையே பெரிது என்று கருதி வளர்ந்த அவன் உயர் பதவியில் அமர்ந்தான். நேர்மைக்கு மாறான செயல் செய்யவேண்டும் என்ற அழுத்தம் இன்று உயர்மட்டத்திலிருந்து அவனுக்கு கொடுக்கப்படுகிறது. எந்த இழப்பை எதிர்கொண்டாலும் நேர்மையைக் காப்பேன் எனத் துணிந்தான் அவன். இதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதை.
வினா 3 (கட்டாயம்). Paper I · விஞ்ஞான உரைப்பகுதி சுருக்கம் — 40-45 சொற்கள் (10 புள்ளிகள்) த10·அ2
பின்வரும் உரைப்பகுதியின் சுருக்கத்தை 40-45 சொற்களில் எழுதுக (எண்ணிக்கை குறிப்பிடுக):

"விஞ்ஞானம் மிகச் சிறந்த அறிவியற் கலையாகும். போக்குவரத்துச் சாதனங்களில் புதுமை காண உதவியுள்ளது. இசையும் நாடகமும் பலருக்கும் பயன்படும்படியாக வானொலி, தொலைக்காட்சி கருவிகளை படைத்துள்ளது. ஆயினும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிவிடும் போர்களுக்கும் காரணமாக உள்ளது. அணுகுண்டுகளும் நச்சுப் புகைகளும் உலகை நடுங்கச் செய்கின்றன. பெரிய வைத்தியசாலைகளில் அறுவைச் சிகிச்சை கருவிகள், நோய் கண்டறியும் கருவிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறது. ஆயினும் சமுதாயத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் விஞ்ஞானம் விளைக்கிறதா என்றால் இல்லை. விஞ்ஞானத்தை விடவும் விழுமிய மெய்யுணர்வே உலகுக்கு அவசியமாகும்."
வினா 4 (கட்டாயம்). Paper II · சுருக்கமான விடை — இலக்கியம் (20 புள்ளிகள்) த10·அ4
1. சுருக்கமான விடை எழுதுக:

(1) "எட்டுணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது"
(அ) எட்டுணை என்பதைப் பிரித்து எழுதுக. (ஆ) எத்துணை என்பதன் பொருள் யாது?

(2) "பொதிகை வரையினிற் கால் கொண்டு"
(அ) பொதிகை என்பது யாது? (ஆ) "கால் கொண்டு" என்பதனை விளக்குக.

(3) "காவற்பரணில் கண்ணுறங்கும் வேளையிலே கண்ணான மச்சி வந்தென் காலூன்றக் கண்டேனே"
(அ) தலைவியின் முக்கியத்துவத்தை தலைவன் எச்சொல்லால் வெளிப்படுத்துகின்றான்? (ஆ) 'காலூன்றல்' என்பதன் பொருள்?

(4) "சினிமா மொழி மொழிபெயர்க்க முடியாத ஒன்று. அது மனித குலத்துக்கே பொதுவானது."
(அ) சினிமா மொழிக்கும் ஏனைய மொழிகளுக்கும் இடையிலான வேறுபாடு? (ஆ) சினிமா மொழி எந்த மொழி பேசுவோராலும் விளங்கிக்கொள்ளத்தக்கது என்பதை உணர்த்தும் தொடர்?

(5) "தங்கச்சியை வாரிக்கொண்டா. அவட கண்கள் இரண்டும் ததும்பிப் பீறின"
(அ) "தங்கச்சியை வாரிக்கொண்டா" என்பதன் மூலம் வெளிப்படும் உணர்ச்சி? (ஆ) தங்கச்சியை வாரிக்கொண்டது யார்?

(6) "குணக்குன்றாய் உழைத்துண்ணும் குலவிளக்காம் மனிதன்"
(அ) இங்கு மனிதனின் சிறந்த செயலாகக் கூறப்படுவது? (ஆ) 'குணக்குன்று' என்பது என்ன அணி?

(7) "மூடருக்கும் பேடருக்கும் முதியோர் மெலியோர்க்கும் தேடருநல் இரத்தினம் போற் தெரிவையரைச் சேர்த்துவரோ?"
(அ) 'பேடர்' எனப்படுபவர் யாவர்? (ஆ) இங்கு பெண்கள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகின்றனர்?

(8) "மடப்பாவை தன்வரமும் என்வரமும் வழுவா வண்ணம் கோடுகின்ற மொழியவன்பால் எனைத் தாது விடுக."
(அ) இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது? (ஆ) கோடுகின்ற மொழியவன் யார்?

(9) "நெறி திறம்பாத் தன்மெய்யை நிற்பதாக்கி இறந்தான் தன் இளந்தேவி"
(அ) இங்கு தசரதனுடைய எச்சிறப்பு உணர்த்தப்படுகின்றது? (ஆ) 'இளந்தேவி' எனப்படுபவள் யார்?

(10) "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் கூறுவதற்கு இம்மனப்பான்மை ஊக்கமளித்தது."
(அ) இங்கு சுட்டப்படும் மனப்பான்மை எது? (ஆ) யாதானும் நாடாமால் ஊராமால் என்ற தொடரை விளக்குக.
வினா 5 (கட்டாயம்). Paper II · கவிதை/உரைநடை பகுப்பாய்வு (20 புள்ளிகள்) த10·அ4
2. பின்வரும் செய்யுட் பகுதிகளையும் உரைநடைப் பகுதிகளையும் வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக:

(i) யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் — யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(அ) எத்தகையவருடைய நட்பைப் பேணக்கூடாது? ஏன்?
(ஆ) நாயின் நன்றி உணர்வு வெளிப்படுத்தப்படும் விதத்தை விளக்குக.

(ii) பேதைமை என்பதுஒன்று யாதெனில் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல்.
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
(அ) பேதைமை என்பதை வரைவிலக்கணம் செய்க.
(ஆ) 'காதன்மை கையல்லதன்கண் செயல்' என்ற தொடரை விளக்குக.

(iii) நீரெடுத்து வருதற்கவள்மணி
நித்திலப்புன்னகைச்சுடர் வீசிடப்
போரெடுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளையதற்குத் தினந்தொறும்
வேரெடுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெடுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்
(அ) காதலி நீரெடுக்கச் செல்வதை பாரதியார் விவரிக்குமாற்றை விளக்குக.
(ஆ) காதலிக்காக தான் காத்திருப்பதை விவரிப்பதற்கு பாரதியார் கையாண்ட உவமை.

(iv) "பணியாரம் செய்து பனை நார்ப்பெட்டியில் மூடி மாடாவில் மறைத்து வைத்ததுபோல எவ்வளவு கவனமாக இந்தக் கதையை கோப்பிலே செருகி வைத்தேனே! எங்கே போனது. இறக்கை முளைத்துப்... பனி மூடிய அந்த அதிகாலையிலும் நான் நண்பரைத் தேடிக்கொண்டு ஓடினேன்."
(அ) கோப்பினைப் பாதுகாத்த முறைமையை விளக்குவதற்கு ஆசிரியர் கையாண்ட உவமையில் நீர் காணும் சிறப்பினை விளக்குக.
(ஆ) தொலைந்த கோப்பினைக் கண்டுபிடிப்பதில் அவர் கொண்டிருந்த ஆதங்கம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?

(v) "வாதத்துக்கென்று வந்திருந்தவர்களில் தப்பித்துக்கொள்ள வழிவகைகளின்றித் தம்மை அறியாமலே வாய்குழறி அகப்பட்டுக்கொண்டவர்கள் தமது உடல் நடுங்க நாத்தழுதழுத்து பிறிட்டோ தக்கவர் அல்லர் என்று தாமே சொல்லிச் சமாதானப்பட்டுக்கொண்டார்கள். அன்று நடந்த கூட்ட நிகழ்ச்சியோடு பிறிட்டோவின் பிரதிநிதித்துவக் கதை நின்றுவிட்டது. ஆறுமுக நாவலர் அவர்களின் ஆசீர்வாதத்தால் சேர் பொன். இராமநாதன்துரை அன்று தொடக்கம் அரை நூற்றாண்டுக்கு மேல் இலங்கைச் சட்டசபையில் ஒர் இலங்கைச் சிவன் ஆயிருந்து விளங்கினார்."
(அ) பிறிட்டோ சார்பாக வாதிட வந்தவர்களின் இயலாமை எவ்வாறு நயம்பட விவரிக்கப்படுகின்றது?
(ஆ) இலங்கை அரசியலில் சேர் பொன். இராமநாதன் பெற்றிருந்த முக்கியத்துவம் எவ்வாறு விவரிக்கப்படுகின்றது?
வினா 6 (கட்டாயம்). Paper II · குகப்படலம் அல்லது புறநானூறு+குறுந்தொகை (15 புள்ளிகள்) த10·அ4
3. குகப்படலத்தில்,
(அ) குகனது சிறப்பு
(ஆ) கைகேயியின் இழிவு
ஆகியன வெளிப்படுமாற்றினை விவரிக்குக.

அல்லது

(அ) "இனி நினைந்து..." என்னும் புறநானூற்றுப் பாடலில் முதியவரின் ஏக்கம்
(ஆ) "தச்சன் செய்த..." என்னும் குறுந்தொகைச் செய்யுளில் காதலியின் பிரிவுத் துயர்
ஆகியன வெளிப்படுத்தப்படுமாற்றினை விளக்குக.
வினா 7 (கட்டாயம்). Paper II · "இலட்சியமும் சமநோக்கும்" அல்லது "கம்பியூட்டர்" (15 புள்ளிகள்) த11·அ9
4. "இலட்சியமும் சமநோக்கும்" என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு:
(அ) இலட்சியமும் சமநோக்கும் என்பதற்கான விளக்கம்.
(ஆ) மணிவாசகர், தருமர், தசரதன் ஆதியோர் தத்தம் இலட்சியத்திற்கு கொண்ட உறுதிப்பாடு.

அல்லது

"கம்பியூட்டர்" என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு:
(அ) கதையோட்டத்தில் அரவிந்தன் பாத்திரம் பெறும் முக்கியத்துவம்.
(ஆ) ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு.
வினா 8. Paper II · விவேக சிந்தாமணி — புல்லர்/நல்லோர் (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ3
5. "தண்டாமரையினுடன் பிறந்தும்..." என்று தொடங்கும் விவேக சிந்தாமணிப் பாடலை அடிப்படையாகக் கொண்டு:
(அ) புல்லர், நல்லோர், ஆறியோருக்கிடையிலான வேறுபாடு.
(ஆ) அந்த வேறுபாட்டை உணர்த்துவதற்கு கவிஞர் கையாண்ட உவமையின் பொருத்தப்பாடு.
வினா 9. Paper II · "தமிழ்ப் பண்பாடு" கட்டுரை (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ3
6. "தமிழ்ப் பண்பாடு" என்ற கட்டுரையில்
(அ) பழந்தமிழ்ப் புலவர்கள்
(ஆ) பிற்கால அறிஞர்கள்
ஆகியோரிடத்து கண்ணோட்டம் எனும் மனப்பான்மை காணப்பட்டமை எடுத்துரைக்கப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக.
வினா 10. Paper II · "சீறி ஓடாத வருங்கால மனித நதி" கவிதை (Q5/6/7 — ஒன்றை தேர்க, 10 புள்ளிகள்) த11·அ6
7. "சீறி ஓடாத வருங்கால மனித நதி..." என்ற கவிதையில்
(அ) எழுத்தறிவின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுமாறு
(ஆ) அதனை வலியுறுத்துவதற்கு ஆசிரியர் கையாண்ட உத்தி
ஆகியன பற்றி விளக்குக.

பகுதி I — புறவய வினாக்கள் (MCQ)

MCQ விடைகள் புறவய விடைகள் உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் சரிபார்க்கவும். ✓ குறி திட்டமிட்ட விடையை மட்டும் குறிக்கிறது.
  1. 'பங்கப் பழனத் துழுமுழவர்' — இங்கு பங்கம் என்பது:
    1. பிளவு
    2. சேறு
    3. சேதம்
    4. வளைவு
  2. 'தச்சன் செய்த சிறுமா வையம்' — இங்கு வையம் என்பது:
    1. உலகம்
    2. பல்லக்கு
    3. தேர்
    4. வீடு
  3. 'ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்' — இங்கு ஏதிலார் என்பதன் எதிர்க்கருத்து:
    1. உதவியற்றோர்
    2. காரணம் அற்றோர்
    3. பகைவர்
    4. உறவினர்
  4. 'இலட்சியங்களும் இலட்சியவாதிகளும் அபின்னம்' — இங்கு அபின்னம் என்பதன் எதிர்க்கருத்து:
    1. பின்னம்
    2. முன்னம்
    3. பேதமின்மை
    4. ஒற்றுமை
  5. 'சினிமா மொழி நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது' — பரிச்சயம் என்பது:
    1. சோதனை
    2. பழக்கம்
    3. உடன்பாடு
    4. வழக்கம்
  6. பொருள் தொடர்பின் அடிப்படையில் நோக்கும்போது வேறுபட்டு நிற்கும் சொற்களின் இணைவு:
    1. ஆம்பல் — தாமரை
    2. கயல் — வரால்
    3. மூங்கில் — பனை
    4. மலர் — இலை
  7. ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களைக் கொண்ட தொகுதி:
    1. புலன், கரணம், ஆவி
    2. கானகம், காடு, வனம்
    3. பலம், மூலம், சாகம்
    4. அளி, வளை, மேதி
  8. ஊரவர் உபயோகத்துக்கு உரிய பொது நீர்நிலை:
    1. ஊருணி
    2. ஊர்மன்று
    3. ஊராட்சி
    4. ஊரம்பலம்
  9. சினிமாத் துறையில் 'edit' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகத் தமிழில் வழங்கும் கலைச்சொல்:
    1. பதிப்பு
    2. படத்தொகுப்பு
    3. ஒளிப்பதிவு
    4. ஒலிப்பதிவு
  10. ஏதேனும் ஒன்றை மிகுந்த ஈடுபாட்டோடு இலயித்துப் பார்ப்பதைக் குறிக்கும் அருஞ்சொற்றொடர்:
    1. வழிமேல் விழி வைத்து
    2. அகமும் முகமும் மலர
    3. வைத்தகண் வாங்காமல்
    4. உள்ளத்தில் உவகை பொங்க
  11. பிடிவாதம் செய்தலைக் குறிக்கும் மரபுத்தொடர்:
    1. கங்கணம் கட்டுதல்
    2. ஒற்றைக்காலில் நிற்றல்
    3. கொம்பு சீவிவிடுதல்
    4. வரிந்துகட்டி நிற்றல்
  12. 'பசுமரத்தாணிபோல்' என்னும் உவமைத் தொடரால் உணர்த்தப்படுவது:
    1. இலகுவாகவும் நீங்கா வகையிலும் மனதில் பதிதல்
    2. மறக்க முடியாத வகையில் மனவேதனைப் படுதல்
    3. கண்ணுக்குப் புலனாகா வகையில் மறைந்து போதல்
    4. மீட்டெடுக்க முடியா வகையில் ஆழமாகப் பதிதல்
  13. ஒத்த பொருள் தரும் சொற்களால் ஆன இணைமொழி:
    1. ஊண் உறக்கம்
    2. கள்ளம் கபடம்
    3. அருமை பெருமை
    4. வீடு வாசல்
  14. ஒலிக்குறிப்புச்சொல் இடம்பெற்ற தொடர்:
    1. கடலின் சீற்றம் துல்லியமாகக் கேட்டது
    2. வானம் பளிச்சென்று இருந்தது
    3. அது பேசாமல் கம்மென்று இருந்தது
    4. அவள் கலீர் எனச் சிரித்தாள்
  15. முக்கியத்துவம் அற்ற விடயத்தில் கவனம் செலுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் பழமொழி:
    1. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
    2. தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே
    3. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    4. மலையைக் கல்லி எலியைப் பிடித்தல்
  16. இருபத்தைந்து ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா:
    1. வெள்ளிவிழா
    2. பொன்விழா
    3. அமுதவிழா
    4. பவளவிழா
  17. தொகுத்துக் கட்டிய பூக்களின் கூட்டத்தைச் சுட்டுவதற்குப் பொருத்தமற்ற சொல்:
    1. கொத்து
    2. மஞ்சரி
    3. கற்றை
    4. செண்டு
  18. 'வயல்வெளி பச்சைப்பசேல் என்று இருந்தது' — இங்கு பச்சைப்பசேல் என்பது:
    1. அடுக்குத்தொடர்
    2. அடுக்கிடுக்குத்தொடர்
    3. இரட்டைக்கிளவி
    4. இணைமொழி
  19. பொருத்தமற்ற சொல்லைக் கொண்ட தொகுதி:
    1. ஆடு: கடா, மறி, குட்டி
    2. கோழி: சேவல், பேடு, குஞ்சு
    3. மான்: கலை, பிணை, பிள்ளை
    4. மாடு: எருது, பசு, கன்று
  20. ஆபரணம், கடமை, பாம்பு என்னும் பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்:
    1. அரவம்
    2. கலம்
    3. பணி
    4. சர்ப்பம்
  21. ககர மெய் ஒலிப்பால் வேறுபட்ட வகையில் இடம்பெறும் சொல்:
    1. பாகம்
    2. நகம்
    3. வேகம்
    4. தங்கம்
  22. பகுதி விகாரப்பட்ட சொல்:
    1. செய்தான்
    2. கண்டான்
    3. நடந்தான்
    4. பாடுகிறான்
  23. 'ன்' என்னும் இடைநிலை இடம்பெற்ற சொல்:
    1. போனான்
    2. ஓடினான்
    3. பாடுகின்றான்
    4. சென்றது
  24. 'ஆல்' உருபு காரணப் பொருளில் இடம்பெற்ற தொடர்:
    1. கத்தியால் உண்டான காயம்
    2. கம்பனால் பாடப்பட்ட காவியம்
    3. வேகத்தால் ஏற்பட்ட விப்பரீதம்
    4. வீதியால் சென்ற ஊர்வலம்
  25. தோன்றல் விகாரம் இடம்பெற்ற சொல்:
    1. நெற்குவியல்
    2. வில்லிசை
    3. தேனீ
    4. மரவேர்
  26. பின்வருவனவற்றுள் பண்புத்தொகை:
    1. நீளக்காற்சட்டை
    2. நிலவுலகு
    3. புயற்காற்று
    4. ஊர்ப்பாடசாலை
  27. மூவிடத்துக்கும் பொதுவான வினைமுற்று:
    1. வந்தேன்
    2. செய்வான்
    3. வாருங்கள்
    4. முடியும்
  28. அகராதி ஒழுங்கில் அமையாத சொற்றொகுதி:
    1. கல்லு, முள்ளு, வீடு, வெளி
    2. கட்டில், மெத்தை, யானை, பூனை
    3. கரும்பு, சட்டி, தாமரை, மாடு
    4. எறும்பு, நெருப்பு, பரிவு, வண்டு
  29. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதி:
    1. உருவக அணி: உள்ளக்கமலம், வேலைப்பழு, புத்தகப்பொதி
    2. வினைத்தொகை: கொதிநிலை, ஏவுகணை, ஓடுபாதை
    3. இலக்கணப்போலி: முன்றில், கடைவாய், புறநகர்
    4. மரபு: அருமந்த, சோணாடு, யாழ்நகர்
  30. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதி:
    1. தனிப்பெயரடை: மலர்ந்த, ஆழ்ந்த, முடிந்த
    2. தனிவினையடை: நேற்று, முன்பு, இன்று
    3. ஆக்கப்பெயரடை: விரைவான, ஆறுதலாக, மகிழ்ச்சிகரமான
    4. ஆக்கவினையடை: விரைவாக, விருப்பமாக, ஆறுதலாக
  31. விவசாயிகளுக்கு உரத்தை _________ வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது:
    1. நிவாரணமாக
    2. மானியமாக
    3. அனுசரணையாக
    4. காப்புறுதியாக
  32. மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் _________ செய்யப்பட்டது:
    1. வழக்குத் தாக்கல்
    2. விசாரணை
    3. மேன்முறையீடு
    4. தள்ளுபடி
  33. அரசர்களின் புகழை விரித்துரைப்பதையே நோக்கமாகக் கொண்ட _________ சோழர் காலத்தில் எழுந்தன:
    1. கல்வெட்டுகள்
    2. சாசனங்கள்
    3. மெய்க்கீர்த்திகள்
    4. சுவடிகள்
  34. தெனாலிராமனின் நகைச்சுவை உணர்வு அரசவை _________ என்னும் அந்தஸ்தை அவனுக்குப் பெற்றுக்கொடுத்தது:
    1. ஆசுகவி
    2. கவிச்சக்கரவர்த்தி
    3. விஸ்தாரகவி
    4. விகடகவி
  35. உலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாக அச்சமின்றி வாழவே _________:
    1. விரும்பும்
    2. விரும்புகின்றன
    3. விரும்புகின்றனர்
    4. விரும்பக்கூடும்
  36. நீயும் ஏனைய நண்பர்களும் ஒத்துழைப்பீர்களாயின் எங்கள் திட்டம் வெற்றிகரமாக _________:
    1. நிறைவேற்றுவோம்
    2. நிறைவேற்றுவேன்
    3. நிறைவேறும்
    4. நிறைவேற்றுவீர்கள்
  37. இக்கவிதையில் விடுக்கப்படும் அறைகூவல் எதற்கானது? (இயற்கை வளம் — தேசப்பற்று கவிதை)
    1. நாட்டைப் புகழ்ந்துரைப்பதற்கானது
    2. நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதற்கானது
    3. நாட்டின் அழகை விவரிப்பதற்கானது
    4. தேசத் தொண்டு புரிய வலியுறுத்துவதற்கானது
  38. வளம் சிறந்த நாடு என்பதை அதிகம் வலியுறுத்தி நிற்கும் தொடர்:
    1. உச்சிமலை உறவாடும் முகில்களோடே
    2. ஊரெல்லாம் நதியோடும் வயல்களூடே
    3. இச்சைபோல் நீரளிக்கும் ஏரி
    4. ஈடே இல்லாதெலாம் நிறைந்தது
  39. இப்பாடலில் இடம்பெற்றுள்ள உருவக அணிக்கு அடிப்படையாக அமைந்த ஒப்புமைக்கு உரிய விடயம்:
    1. நிறம்
    2. வடிவம்
    3. பயன்
    4. தொழில்
  40. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை முறைப்படுத்துக (இலக்கியம் பற்றி — OCR ஒழுங்கு தெளிவாகக் கிடைக்கவில்லை):
    1. இ, ஈ, அ, உ, ஆ
    2. ஈ, இ, அ, ஆ, உ
    3. ஈ, உ, அ, இ, ஆ
    4. உ, அ, ஆ, ஈ, இ

    விடை: உத்தியோகபூர்வ விடைத்திட்டத்தில் காண்க

← அனைத்து வினாத்தாள்களும்