சா/த கணிதம் · தரம் 10 · அலகு 12 | ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி
ஒவ்வொன்றையும் காரணிகளாக்கு → ஒவ்வொரு வேறுபட்ட காரணியின் மிகப் பெரிய வலுவை எடுத்துப் பெருக்கு.
$6,8,12 \to 2^3\cdot3 = 24$. $4a^2,6ab,8b \to 24a^2b$.
முதலில் காரணிப்படுத்து: $2x+4=2(x+2)$, $3x-9=3(x-3)$ → $6(x+2)(x-3)$.
$x^2-9=(x-3)(x+3)$; $x^2+5x+6=(x+2)(x+3)$; $2x^2+7x+3=(x+3)(2x+1)$ — காரணிப்படுத்திப் பின் LCM. $(b-a)=-(a-b)$.
காரணிப்படுத்தாமல் LCM காண முயலாதே. எல்லா வலுக்களையும் பெருக்காதே — ஒவ்வொரு காரணியின் மிகப் பெரிய வலு மட்டும். பயன்பாடு: "மீண்டும் ஒன்றாக?" = LCM.
learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc