🆕 இதை முதல் தடவை படிக்கிறீர்களா? இது மீட்டல் சுவரொட்டி மட்டுமே — முதலில் முழுப் பாடத்தில் விளக்கத்தைப் படியுங்கள். 📖 முதலில் பாடத்தைப் படிக்க

🔢 அட்சரகணிதப் பின்னங்கள்

சா/த கணிதம் · தரம் 10 · அலகு 13  |  ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி

🤔 ஏன்? எண் பின்னங்களைக் கூட்டுவது போலவே, அட்சரகணிதப் பின்னங்களையும் பொது பகுதி (LCM) கண்டு தான் கூட்ட/கழிக்க முடியும்.
⚙️ அன்றாட உதாரணம்: இரு குழாய்கள் சேர்ந்து ஒரு தொட்டியை நிரப்ப ஆகும் நேரத்தைக் கணக்கிட பின்னக் கோவைகள் பயன்படும்.

முறை (அலகு 3 + 7 + 12 சேர்க்கை)

பகுதிகளின் பொ.ம.க.சி ஐப் பொதுப் பகுதியாக்கு → சமவலுப் பின்னம் → தொகுதிகளை மட்டும் கூட்டு/கழி → சுருங்குமா எனப் பார்.

ஒற்றை உறுப்பு

$\dfrac{5}{3a}-\dfrac{3}{4a} = \dfrac{20-9}{12a} = \dfrac{11}{12a}$.

ஈருறுப்பு

$\dfrac{2}{x+3}+\dfrac{3}{x+4} = \dfrac{5x+17}{(x+3)(x+4)}$.

இருபடிப் பகுதி → காரணிப்படுத்து

$\dfrac{1}{x-1}+\dfrac{3}{x+1}-\dfrac{2}{x^2-1}$,   $x^2-1=(x-1)(x+1)$ → $\dfrac{4(x-1)}{(x-1)(x+1)} = \dfrac{4}{x+1}$.

⚠ பொதுத் தவறு

பகுதிகளைக் கூட்டாதே. கழித்தலில் முழுத் தொகுதி எதிர்க்குறி $-(3x+1)$. இருபடி வந்தால் முதலில் காரணிப்படுத்து; கடைசியில் சுருங்குமா எனப் பார்.

learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc