🆕 இதை முதல் தடவை படிக்கிறீர்களா? இது மீட்டல் சுவரொட்டி மட்டுமே — முதலில் முழுப் பாடத்தில் விளக்கத்தைப் படியுங்கள். 📖 முதலில் பாடத்தைப் படிக்க

🔢 சமன்பாடுகள்

சா/த கணிதம் · தரம் 10 · அலகு 15  |  ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி

🤔 ஏன்? இரு பக்கங்களையும் சமமாக வைத்திருக்க, ஒரு பக்கத்தில் செய்யும் ஒவ்வொரு செயலையும் மறுபக்கத்திலும் செய்ய வேண்டும்.
🧮 அன்றாட உதாரணம்: இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு பொருளை வாங்க ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் தர வேண்டும் எனக் கணக்கிட சமன்பாடு பயன்படும்.

மூன்று வகை

1. பின்னச் சமன்பாடு ($x$ பகுதியில்): ஒரே பின்னம் → குறுக்குப் பெருக்கல்.   2. ஒருங்கமை: நீக்கல் / பிரதியிடல்.   3. இருபடி: $=0$ → காரணி → ஒவ்வொன்றும் $0$.

$x$ பகுதியில்

$\dfrac{3}{x+2}=\dfrac12 \Rightarrow x+2=6 \Rightarrow x=4$.

ஒருங்கமை

குணகம் சமப்படுத்து → கூட்டு/கழி → ஒரு மாறி → பிரதியிடு. ($x=3y$ எனில் பிரதியிடல் எளிது.)

இருபடி — பெருக்கல் $0$

$x^2+5x+6=0 \Rightarrow (x+3)(x+2)=0 \Rightarrow x=-3, -2$.   $b=0$: $x^2=25 \Rightarrow x=\pm5$.   $c=0$: $x^2+2x=0 \Rightarrow x=0,-2$.

⚠ பொதுத் தவறு

இருபடிக்கு இரு மூலங்களும் எழுது. $x^2=k \Rightarrow x=\pm\sqrt k$. ஒருங்கமையில் குணகம் சமப்படுத்திய பின்தான் கூட்டு/கழி. பகுதி $0$ ஆகும் பெறுமானம் தீர்வன்று.

learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc