🆕 இதை முதல் தடவை படிக்கிறீர்களா? இது மீட்டல் சுவரொட்டி மட்டுமே — முதலில் முழுப் பாடத்தில் விளக்கத்தைப் படியுங்கள். 📖 முதலில் பாடத்தைப் படிக்க

📊 தரவுகளை வகைப்படுத்தல் — வட்ட வரைபு

சா/த கணிதம் · தரம் 10 · அலகு 11  |  ஒரு பக்க மீட்டல் சுவரொட்டி

🤔 ஏன்? ஒரு தொகுதியின் ஒவ்வொரு பகுதியையும் மொத்தத்துடன் ஒப்பிட்டு, அதற்கேற்ற கோணத்தை (பங்கு × 360°) வட்டத்தில் குறிப்பதே வட்ட வரைபு.
📊 அன்றாட உதாரணம்: ஒரு குடும்பத்தின் மாத செலவை உணவு/வாடகை/பயணம் என பிரித்து வட்ட வரைபில் காட்டலாம்.

இரு திசை சூத்திரம்

எண் → கோணம்:   $\theta = 360°\times\dfrac{\text{பகுதி}}{\text{மொத்தம்}}$   |   கோணம் → எண்:   $\text{எண்} = \text{மொத்தம்}\times\dfrac{\theta}{360}$

உதாரணம் (மொத்தம் 60)

$25\to150°,\ 20\to120°,\ 15\to90°$ (ஒரு பேர் $=6°$).

உதவிக் குறிப்புகள்

  • ஒரு அலகு $= \dfrac{360°}{\text{மொத்தம்}}$.
  • பின்னம் $= \dfrac{\theta}{360}$.
  • மொத்தம் $= \text{எண்}\times\dfrac{360}{\theta}$.
  • மீதி $= 360° -$ மற்றவை.

அளவுகளுடன்

நேரம்/நிலம்/பணம் எதுவாயினும் அதே சூத்திரம். எ.கா. $18$ மணியில் $90°$ → $4\tfrac12$ மணி; $720$ ha இல் $100°$ → $200$ ha. விகிதம்: கோணங்களை நேராக ஒப்பிடு ($90°:180°=1:2$).

⚠ பொதுத் தவறு

எந்தத் திசை எனப் பார் — எண்↔கோணம். எல்லாக் கோணமும் சேர்ந்து $360°$ (சரிபார்ப்பு). அலகுடன் விடை எழுது.

learn.gtdigital.tech/ol/maths · Goperamanan Thirusenthivel, MSc