அலகு 1 — அளவீடு
இயற்பியல் முழுவதும் அளவீட்டின் (measurement) மேல் கட்டப்படுகிறது. அலகுகள் (units), பரிமாணங்கள் (dimensions), திசையன்கள் (vectors), வழுக்கள் (errors) — இவை அலகு 1-இல் மட்டுமின்றி, Paper II-இன் ஒவ்வொரு கணக்கிலும் திரும்பத் திரும்ப வரும். அலகு சரியில்லாவிட்டால் விடை சரியாகாது; பரிமாணம் சரியில்லாவிட்டால் சமன்பாடே தவறு. இது குறைந்த நேரத்தில் கற்கக்கூடிய, ஆனால் எல்லா அலகுகளுக்கும் அடித்தளமான அலகு.
அலகின் கருத்து வரைபடம் (Concept Map)
ஒவ்வொரு பெட்டியையும் சொடுக்கி அந்தப் பகுதிக்குச் செல்லவும். மஞ்சள் = அதிக தேர்வு மதிப்பெண்.
பகுதிகள்
Paper I: பொதுவாக 1–2 MCQ — அலகுகள், பரிமாணங்கள், அல்லது வேர்னியர்/மைக்ரோமீட்டர் வாசிப்பு. Paper II: தனிக் கேள்வியாக அரிது; ஆனால் பரிமாணப் பகுப்பாய்வும் வழுக் கணிப்பும் மற்ற கேள்விகளுக்குள் மறைந்திருக்கும். வேர்னியர் least count, zero error, percentage error — இவை கிட்டத்தட்ட ஒவ்வொரு செய்முறைத் தேர்விலும் (practical) வரும்.